அல்லாஹ்வின் திருப் பெயரால்…….
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏகத்துவப் பிரச்சாரத்திற்க்காக சகோ அப்பாஸ் அலி அவர்கள் வந்திருந்தது அனைவரும் அறிந்ததே.அப்போது சூனியம் தொடர்பாக மௌலவி இஸ்மாயில் ஸலபி அவர்கள் கூறிவருகின்ற கருத்துக்கள் தவறானது என்றும் அதை தான் பகிரங்க விவாதக்களத்திலேயே தான் நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி பகிரங்க ஸவால் ஒன்றை விடுத்திருந்தார்.
அதற்க்கு இஸ்மாயீல் ஸலபி அவர்கள் பகிரங்க ஸவால் ஒரு தெளிவு என்ற தலைப்பிட்டு தான் விவாதத்திற்கு தயார் இல்லை என்பதை பகிரங்கமாகவே துண்டுப் பிரசுரம் மூலமாக ஒத்துக் கொண்டார்.
அப்படி அவர் ஒப்புக் கொண்டு அறிவித்த அந்த பிரசுரத்திலே பல கருத்துக்களை முன்னுக்குப் பின் முரனாகக் குறிப்பிட்டு இருந்தார்.
அந்தப் பிரசுரத்திற்க்கு சகோதரர் றஸ்மின் (இஸ்லாமியக் கல்லூரி மாணவர் கடையநல்லூர்) அவர்கள் ஒரு மறுப்புக் கடிதத்தை மௌலவி இஸ்மாயீல் ஸலபி அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தின் பிரதியை அப்படியே தருகிறோம்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.