Friday, April 16, 2010


மவ்லவி இஸ்மாயீல் ஸலபி அவர்களுக்கு ஓர் மனந்திரந்த மடல்.
அன்பின் சகோதரர் இஸ்மாயீல் ஸலபி அவர்களுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும்………………….
அல்லாஹ்வுடைய அமைதியும்,கருணையும் உங்கள் மீது உண்டாகட்டுமாக.
இந்த மாத
(2010.04)
உண்மை உதயம்(?) பத்திரிக்கையில் தாங்கள் எழுதியுள்ள கட்டுரை தொடர்பாக இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சூனியம் தொடர்பான கட்டுரையை நீங்கள் எழுதும் நேரத்தில் அந்தக் கட்டுரைக்கு சகோதரர் பி.ஜெ அவர்கள் பதில் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பாக நான் தொடர்சியாக உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் பதில் எழுதினேன்.ஆனால் அந்தக் கட்டுரைகளுக்கு நீங்கள் பதில் தருவதை விட்டு விட்டு உண்மை உதயத்தில் தொடராக உங்கள் கட்டுரைகளை பிரசுரம் செய்தீர்கள்.அதையே எனக்கும் பதிலாக அனுப்பவும் செய்தீர்கள்.

ஆனால் அந்த கட்டுரைகளில் நான் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் இருக்கவில்லை என்பது உங்களுக்கே நன்கு தெரிந்த விஷயம்.

அத்துடன் அந்த ஒவ்வொரு கடிதத்திலும் நான் கிட்டத்தட்ட நான்கு கேள்விகளை தொடராக வைத்துவந்தேன் அதில் ஒன்ருக்குக்கூட நீங்கள் பதில் தரவில்லை என்பதையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்துகிறேன்.

இப்போது இந்த மாத உண்மை உதயத்தில்(?) இடம் பெற்றிருக்கும் அன்புள்ள அல்ஹஸனாத்திற்கு! நினைக்க மறந்ததேனோ? என்ற கட்டுரை தொடர்பான சில முக்கிய விஷயங்களை எழுத முனைகிறேன்.
முதலாவதாக தாங்கள் கைப்பட எழுதியிருக்கும் அந்தக் கட்டுரை எழுதப்; பட்ட நோக்கத்தை நீங்களே கூறியுள்ளீர்கள்.

அதாவது அல்ஹஸனாத்(?)என்ற மாத இதல் தனது
40 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஒரு சிறப்பு இதழை வெளியிட்டுள்ளது.அந்த இதழில் ஜமாஅத் உருவாக்கத்தோடு அதன் அச்சு ஊடகத்தின் வளர்ச்சியும் ஆரம்பித்து விட்டது என்ற தலைபில் எழுதப் பட்ட கட்டுரையில் உள்ள ஒரு குறையை(?)சுட்டிக்காட்டுவதாக சொல்லி தாங்கள் யார் என்பதை தவ்ஹீத் வாதிகளுக்கு காட்டிவிட்டீர்கள்.(அல்லாஹ் காட்ட வைத்து விட்டான்.அல்ஹம்து லில்லாஹ்)

அதாவது அல்ஹஸனாத்(?)இதழ் ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் இலங்கையில் வெளிவந்த பத்திரிக்கைகளின் பெயர்களை கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் அதில் உண்மை உதயம்(?)பற்றிக் குறிப்பிடவில்லை.

அதனால் உண்மை உதயம்(?) ஜமாத்தே இஸ்லாமியுடன் எப்படி நட்பு வைத்திருந்தது ஆனால் நீங்களோ(அல்ஹஸனாத் நிர்வாகம்)எங்களை மறந்து விட்டீர்கள்.அப்படி மறந்த காரணத்தால் எங்களுக்கும் உங்களுக்கும் இருந்த உறவு என்ன அதாவது ஆரம்பகால தஃவாவில் நாம் எப்படி இணைந்திருந்தோம் என்பதை உங்களுக்கு ஞாபகப் படுத்துகிறோம் என்கின்ற தொணியில் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளீர்கள்.

முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பதை மறந்து விட்டீர்கள் போலும்…………..??????????????

அல்லாஹ் கூறியுள்ள ஒரு வார்த்தையை நினைவு படுத்தகிறேன்.
(17:81) وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
உண்மை வந்து விட்டது பொய் அழிந்து விட்டது நிச்சயமாக பொய் அழிந்தே தீரும்
(17:81)

சில காலங்களுக்கு முன்னால் வரை மார்க்கத்தை மக்களுக்கு மத்தியில் தெளிவாக சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் ஏன் திடீரென்று ஒற்றுமைக் கோஷம் போடுபவர்களுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்தீர்கள் என்று நான் பல முறை எண்ணியதுண்டு.

அந்த சந்தேகம் இந்த மாத உண்மை உதயத்தை பார்த்தவுடன் எனக்கு தெளிவாகிவிட்டது.

இதற்கு முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் இலங்கைக் கிளை உங்களைப் பற்றி துண்டுப் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் தாங்கள் ஜமாத்தே இஸ்லாமி(?)யின் கருத்தை பிரச்சாரம் செய்பவர்தான் என்று தெளிவாக கூறினார்கள்.அதை இந்தக் கட்டுரையின் மூலம் தாங்களே ஒத்துக் கொண்டுள்ளீர்கள்.

அல்ஹஸனாத்(?)உங்கள் பத்திரிக்கையின் பெயரை வெளியிடவில்லை என்பதற்காக ஆதங்கப்பட்ட நீங்கள் உங்கள் பத்திரிக்கையில் ஜமாத்தே இஸ்லாமி(?)பற்றி வெளியிட்ட செய்திகளையும்,அவர்களின் எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளையும் ஸ்கேன் செய்து வெளியிட்டுள்ளீர்கள்.

அப்படியென்றால் பல காலமாக ஜமாத் அன்ஸார் ஸ{ன்னதில் முஹம்மதிய்யா என்ற பெயரால் நீங்கள் ஜமாத்தே இஸ்லாமியின் அறிவிக்கப்படாத கிளையாக இயங்கினீர்களா???????????

1956ம் ஆண்டு
4 ம் மாதம்
28ம் தேதி ஜமாத்தே இஸ்லாமியின் கூட்டம் நடை பெற்ற செய்தியை 1956.05.15ம் தேதி வெளியான உண்மை உதயத்தில்(?)பிரசுரித்ததாக தாங்கள் எழுதி அதன் ஸ்கேன் பிரதியையும் அதில் இணைத்துள்ளீர்கள்.

அல்லாஹ் வெளிக்காட்டினான்.
அந்த ஸ்கேன் செய்யப்பட்ட பிரதியை நன்றாக மீண்டும் ஒரு முறை நீங்களே பாருங்கள் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது.
ஜமாத்தே இஸ்லாம்.

கடந்த
28-04-56 சனி பின்நேரம் இரவு
10 மணியிலிருந்து நடுநிசி
1.30 மணி வரை ஜமாத்தே இஸ்லாமி இலங்கை.யின் ஓர் விசேஷக் கூட்டம் கொழும்பு பீர் ஸாயிபு தெருவிலுள்ள அல்ஜிஹாத் புக் ஸ்டாலில் கூடிற்று.அவ்வமயம் ஜனாப் பி.எம் யூசுப் ஸாஹிபவர்கள் தலைமை வகித்தார்கள்.

பாத்திஹா ஓதப் பட்டு கூட்டம் ஆரம்பமாயிற்று மவ்லவி யூ.எம் தாஸின் பாஸி,நத்வி அவர்கள் இன்றைய முஸ்லீம்களின் கடமையும்,அதில் முஸ்லீம்களின் பங்கும் எனும் மகுடத்தில் ஓர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.(அதன் சாரம்சம் வேறொரு முறை இப்பத்திரிக்கையில் இடம் பெரும்)

இதுதான் தங்கள் பத்திரிக்கை
1956ல் ஜமாத்தே இஸ்லாமி தொடர்பாக வெளியிட்ட செய்தி
மேற்கண்ட அந்தச் செய்தியில் பாத்திஹா ஓதப்பட்டு கூட்டத்தை ஆரம்பித்ததாக தாங்கள் ஆசிரியராக கடமையாற்றும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.பாத்திஹா ஓதி கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு மார்க்கத்தில் எங்காவது ஆதாரம் உள்ளதா?

அத்துடன் அதைத் தொடர்ந்து இன்னும் பல செய்திகளையும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

அதாவது மேற்படி ஜமாஅத் உருவாக்கத்தோடு அதன் அச்சு ஊடகத்தின் வளர்ச்சியும் ஆரம்பித்து விட்டது என்ற கட்டுரையை எழுதிய ஏ.எல்.எம் இப்றாஹீம்(கபூரி) உண்மை உதயத்தில்(?)ஏற்க்கனவே பல கட்டுரைகளை வரைந்ததாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

அதுமட்டுமன்றி உண்மை உதயம்(?)ஜமாத்தே இஸ்லாமியின் முக்கிய உறுப்பினர்களுக்கு எழுத்துத் துறைக்கான களம் அமைத்துக் கொடுத்தது.இதனால் ஜமாத்தே இஸ்லாமியின் செய்திகள் அதில் இடம் பெற்றன.என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

அப்படியாயின் தாங்கள் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர் அன்ஸார் ஸ_ன்னா தவ்ஹீத் பிரச்சாரம் செய்கிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு முழுக்க முழுக்க ஜமாத்தே இஸ்லாமியின் கருத்துக்களை மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்துள்ளீர்கள்.என்பதில் உங்களுக்கே மாற்றுக் கருத்தில்லை……………..

அத்துடன் இன்னுமோர் முக்கிய விஷயத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த நினைக்கிறேன்.
அதாவது எந்த மவ்தூதி இஸ்லாத்திற்கு எதிராக பல கருத்துக்களை சொல்லியுள்ளாரோ அதே மவ்தூதியின் பல கட்டுரைகளையும் தமிழ்ப் படுத்தி உங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளீர்கள்.
இதுதான் தவ்ஹீத் என்ற கொள்கைக்கும்,உங்களை தவ்ஹீத் வாதி என நம்பிக் கொண்டிருக்கும் மக்களுக்கும் நீங்கள் காட்டும் விசுவாசமோ???????????............
நீங்கள் இப்படியெல்லாம் விசுவாசமாக நடந்ததால் தான் உங்களுக்கும் உங்கள் பாசமிகு அமீருக்கும் புத்தளத்தில் வைத்து ஜமாத்தே இஸ்லாமி நடத்திய இளைஞர் மாநாட்டில் விருது தந்தார்கள் போலும்.

அதனால் தான் இன்றைக்கும் அல்ஹஸனாத்தில் உண்மை உதயத்தின்(?)பெயரைக் குறிப்பிட மறந்ததற்கு நீங்கள் கவலைப் படுகிறீர்கள்…பாவம் அடுத்த இதழில் பெரும்பாலும் ஜெமாத்தே இஸ்லாமி(?) வருத்தப் பட்டு உங்கள் பெயரையும் உங்கள் இதழின் பெயரையும் குறிப்பிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

அல்லாஹ்வே உங்களுக்கு நேர் வழிகாட்ட போதுமானவன்.
இவன்.
RASMIN MISc (India)
Ph: 0094712714739(Srilanka)
00919894488991(India)

Thursday, April 8, 2010



தீன்குலப் பெண்களே! உங்களைத்தான்!

சகோ அப்துந் நாஸர் M.I.Sc

அன்பிற்குரிய தாய்மார்களே! சகோதரிகளே! பெண்கள் நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு தொகுத்துள்ளோம். இதனைக் கடைப்பிடித்து வாழக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நாம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!

'இவ்வுலகம முழுவதும் செல்வமாகும். இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் சிறந்நது நல்லொழுக்க முள்ள பெண்ணாவாள். ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ் ம் (2668)

வீதியில் செல்லும்போது பார்வைகளைத் தாழ்த்திச் செல்லவேண்டும்

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24 : 31)

பர்தாஅணிந்துதான் வெளியே செல்லவேண்டும்

அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24 : 31)

. நபியே! (முஹம்மதே!) உமது மனை வியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது'' என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான் (அல்குர்ஆன் 33 : 59)

தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக, அரை குறை ஆடை அணிந்து, பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். (ஐம்பது ஆண்டுகள் அல்லது) எவ்வளவு ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால், இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ் ம் 3971)

கால்களில் ஒளி எழுப்பும் சலங்கைகள் அணிந்து வெளியில் செல்லக்கூடாது

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24 : 31)

பள்ளிவாசலுக் செல்லும் போது வாசனைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பெண்களாகிய நீங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது நறுமணம் பூசாதீர்கள் (முஸ் ம் 759)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பெண்களே) நீங்கள் இஷாத்தொழுகையில் கலந்து கொள்ள பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள். (முஸ் ம் 758)

அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசக்கூடாது

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (அல்குர்ஆன் 33 : 32,33)

தேவையில்லாமல் தெருக்களில் சுற்றித் திரியக் கூடாது

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 33 : 32,33)

ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது

ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமு‎டிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபி (‏ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ் ம் 2611 )
பெண்கள் தவிர்க்கவேண்டியவை

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றிக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன்பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் ஆகியோரின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 4886)

ஒட்டு (முடியாலான சவுரி) வைத்துக் கொள்ளும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள் (புகாரி 4887)

பெண்களே அதிகமாக தர்மம் செய்வீர்

நபி (ஸல்) அவர்கள் பெண்கள் சமூகமே தான தர்மம் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங்கள்தான் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே ஏன்? என்று அப்பெண்கள் கேட்டனர். அதற்கு நீங்கள் அதிகமாக சாபமிடுகிறீர்கள். கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள். மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றிவிடக் கூடியவர்களாக உங்களை விட வேறுயாரையும் நான் காணவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி 304 )

Monday, March 29, 2010

துர்மணம் தேடும் ஜமாஅதே இஸ்லாமி


மௌலவி.ஹபில் ஸலஃபி


(அல்ஹஸனாத் ஜுன் 2007 இதழில், ஜமாஅதே இஸ்லாமி அமீர உஸ்தாத்(?)ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் என்பவர்,'நறுமணம் நீக்கி துர்மாணம் தேடும் விமர்சிகர்கள்' என்ற தலைப்பில், தவ்ஹீத்வாதிகளை எல்லாம் அரை குறை என்று - தான் ஓர் அரை குறை என்பதை மறந்துவிட்டு - கொச்சைப்படுத்தி எழுதியிருந்தார். அவரது விமர்சினத்திலுள்ள முரண்பாடுகளுக்கும் தவறான விடயங்களுக்கும் பதில் அளிக்கப்படுகிறது.)


கடந்த அல்ஹஸனாத் ஜுன் 2007 இதழில் காக்கா ஹஜ்ஜுல் அக்பர் என்பார் : ஹஸனுல் பன்னா, மவ்லானா மவ்தூதி, மவ்லானா இல்யாஸ், ஸையித் குதுப், யூசுப் அல்கர்ளாவி, ரஷீத் அல்ஃகன்னூஸி, உமர் தில்மஸானி, பைஸல் மவ்லவி போன்றோர் இஸ்லாமிய உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெற்றவர்கள் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டு, வாதிடுகின்றார்.


உண்மையில், இங்கு இவரால் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் பெரிய அறிஞர்களோ, ஆய்வாளர்களோ அல்லர் என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் உலகிலுள்ள மிகச் சொற்பமான, இஸ்லாத்தை விளங்காத சில ஆதரவாளர்களைப் பெற்ற, பல தவறான கொள்கைகளையுடைய இயக்கவாதிகள் மாத்திரமே. இமாம் இப்னு தைமிய்யா, அல்பானி, P.ஜைனுல் ஆபிதீன் போன்ற பன்முக ஆளுமையுடைய அறிஞர்களுக்கு நிகரானவர்களும் அல்லர். வெறுமனே இயக்க ஸ்தாபகர்கள், இயக்கவாதிகள். அவ்வளவுதான் இவர்களின் பெருமை. இவர்களில் பலர் அகீதாவில் தவறு விட்டதால், சமகால பல்துறை சார்ந்த அறிஞர்களால் மிக வன்மையாக விமர்சிக்கப்பட்டவர்கள். எந்தளவுக்கென்றால், சமகால ஹதீஸ் துறை அறிஞர்களில் ஒருவர், யூசுப் கர்ளாவி பற்றி ஒரு விமர்சன நூல் எழுதியுள்ளார். (இஸ்காத் அல்கல்புல் ஆவி யூசுப் அப்தில்லாஹ் அல்கர்ளாவி) யூசுப் கர்ளாவி ஒரு வெறிபிடித்த நாய் என்று தனது நூலுக்கு பெயரிட்டு விமர்சித்துள்ளார்.

இந்தளவு கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டவர்களுக்குத்தான் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் என்று நீங்கள் போலிப் புகழ் தேடிக் கொடுக்க முனைகின்றீர்.
நீங்கள் பெயர் குறிப்பிட்டுத் துதிபாடுபவர்களில் மவ்தூதி தவிர, மற்றவர்கள் எகிப்தில் பல முஸ்லிம் இளைஞர்களைக் குர்பான் கொடுத்ததைத் தவிர, இதுவரை )rஎதையும் சாதிக்காத இக்வான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். மவ்தூதி என்பவர் நபி ( அவர்களின், தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பை மறுத) அவர்கள் யூகத்தின்r்தவர். நபி ( அடிப்படையில் பேசிவிட்டுச் சென்றுவிட்டார்கள் என்று ஹதீஸைக் கேவலப்படுத்திவர். (பார்க்க: முiவாயடிரச சுயளயயடை றுயடஅயளயயடை P.57) இதை மவ்தூதி தனது தப்ஹீமில் 'யூஸூப் நபி ஹிட்லருக்கு நிகரான அதிகாரத்தை வேண்டினார்' என்று நபியையும் குர்ஆனையும் கேவலப்படுத்தியவர்.

இவ்வாறு, நபிமார்களை அவமதிப்பவர்களை முஸ்லிம் உம்மத் எவ்வாறு அங்கீகரிக்கும்? மவ்லானா இல்யாஸைப் பற்றிப் பேசவே தேவையில்லை. தப்லீக் இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகளை அவதானித்தால், அவரது இஸ்லாமிய அறிவு ஞானத்தையும் சமூக அங்கீகாரத்தையும் பட்டென்று புரிந்து கொண்டு விடலாம்.


இலங்கையில் கூட, நீங்கள் குறிப்பிட்டுள்ள இயக்கவாதிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான்களான ஆகுஊனு தவிர்ந்த மற்ற இயக்கங்களின் அங்கீகாரத்தைப் பெறாதவர்கள். ஜமாஅத்தே இஸ்லாமியும் இக்வான்களான ஆகுஊனுயும், இல்யாஸ் மவ்லானாவின் சமூக அங்கீகாரக் கருத்துக்களை(?) எடுத்துக் கூறுவதில்லை. தவ்ஹீத்வாதிகளுக்கு எதிராக, தப்லீக் ஜமாஅத்வாதிகளைத் தூண்டிவிட மாத்திரம் அவரின் பெயரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதேபோல், தப்லீக் ஜமாஅத் மஜ்லிஸ்களில், ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) இயக்கவாதிகளின் கருத்துக்கள் பேசப்படுவதில்லை. ஏன்? ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) இயக்கவாதிகளின் ஒரே இலட்சியம் கி(இ)லாபத் கனவுதான். எனினும் இவர்களே இரண்டாகப் பிரிந்து, பல துருவங்களாக உள்ளனர். இவர்களே ஒற்றுமைக் கோஷத்தையும் இடைவிடாது போட்டும் வருகின்றனர்.


'
முதலில் விமர்சிக்கப்படுபவரையும், அவரது மகிமைகள், அவர் செய்திருக்கும் மகத்தான பணிகள் என்பவற்றையும் சிலாகித்துக் குறிப்பிட்ட பின் அவரது உலக மறுமை நற்பேறுகளுக்காக துஆச் செய்துவிட்டு அடுத்ததாக,ஒரு முஸ்லிம் தன் அடுத்த சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைப்பாடு என்ற வகையில் தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பண்பாடாக விமர்சிக்கும் போதும், பின்னால் அந்தத் தவறுகளுக்காக அல்லாஹ் அவரை மன்னித்து விடுவானாக! என்று பிரார்த்தனை செய்யும் போதும் மனம் புல்லரித்து விடுகின்றது. ஒரு மனிதரிடம் அடக்கமும் அறிவும் இருக்கின்றது என்பதற்கான அடையாளம்தான் இத்தகைய விமர்சனமாகும்.' என்று எழுதியுள்ளீர்.


'
ஒருவரை விமர்சித்தால், அவரது மகிமைகள், அவர் செய்திருக்கும் மகத்தான பணிகள் என்பற்றையும் சிலாகித்துக் குறிப்பிட்ட பின்னர்தான்...' என்று தொடரும் நீங்கள், இதற்கு முன்னர் அறிஞர் P.து.யையும் பல தவ்ஹீத் அறிஞர்களையும் விமர்சித்துள்ளீர்கள். நீங்கள் எழுதியபடி, அறிஞர் P.து. அவர்கள் செய்துவரும் நற்பணிகளை எல்லாம் சுட்டிக் காட்டித்தான் விமர்சித்தீர்களா?


இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியூடாக இஸ்லாத்தின் தூதை, முஸ்லிமல்லாத மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களில் கணிசமான ஒரு தொகையினரை, இஸ்லாத்தில் நுழைய வைத்து, பலரை இஸ்லாத்தின் ஆதராவாளர்களாக மாற்றியதை எடுத்துக் காட்டித்தான் விமர்சித்தீர்களா?


வரதட்சணை கொடுமைகளால் ஏற்பட்ட சீரழிவுகளை எடுத்துக்காட்டி, இஸ்லாமிய பெண் விடுதலைக்காக அவர் ஆற்றிவரும் புரட்சிகரமான பணிகளை எடுத்துக் காட்டித்தான் விமர்சித்தீர்களா?


அமேரிக்க, இஸ்ரேலின் அராஜகங்களை பகிரங்கமாக மேடை போட்டு அவர் கண்டித்து ஆற்றிய உரைகளை எடுத்து விளக்கித்தான் விமர்சித்தீர்களா?


தூய்மைத் தவ்ஹீத் வாதத்தை ஆய்வினடியாய் எடுத்துக் கூறி, ஷிர்க்-பித்அத்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிப்பதில் அவர் ஆற்றிவரும் நிகரற்ற பணிகளை எடுத்துக் காண்பித்துத்தான் விமர்சித்தீர்களா?


காதியானிஸம், தரீக்காயிஸம், சூபிஸம், 19யிஸம், கிறிஸ்தவர்கள் போன்ற பல்வேறு தவறான மதவாதிகளுடன் அவர் விவாதித்து, இஸ்லாத்தின் பெருமையை நிரூபித்ததையெல்லாம் எடுத்துக் கூறித்தான் விமர்சித்தீர்களா?


• 20
ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்து, உரை, ஆய்வு போன்ற அனைத்து ஊடகங்களாலும் அவர் சத்திய இஸ்லாத்தைக் காப்பதற்காக இடைவிடாது போராடி வருவதைக் குறிப்பிட்டுக் கூறித்தான் விமர்சித்தீர்களா?


இந்த நாட்டில் தவ்ஹீத் அமைப்புக்கள் செய்து வரும் நற்பணிகளையெல்லாம் சிலாகித்துத்தான் விமர்சித்தீர்களா?


ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் இயக்கங்களின் தவறான கொள்கைகளை எவருக்கும் அஞ்சாமல், துணிகரமாகவும் விவேகமாகவும் விமர்சித்தார் என்பதற்காக மட்டும் அவரை விமர்சித்தீர்கள். உங்கள் இயக்கம் சார்ந்தவர்களை விமர்சிக்கும் போது, நாங்கள் மட்டும் நன்மையைக் கூற வேண்டும். நீங்கள் எப்படியும் விமர்சிக்கலாம் என்ற இறுமாப்புத்தானே இவ்வாறு எழுதவைத்துள்ளது. 'ஒருவரிடம் அடக்கமும் அறிவும் இருக்கின்றது என்பதற்கான அடையாளம்தான் இத்தகைய விமர்சனமாகும்...' என்று தொடரும் நீங்கள், மற்றவர்களின் ஒரே ஒரு நற்பணியைக் கூட சுட்டிக் காட்டிப் பண்பாடாக விமர்சிக்கவில்லை;. மனிதத் தவறுகளுக்காக அல்லாஹ்விடம் அவர்கைளை மன்னித்து விடுவாயாக! என்று நீங்கள் பிரார்த்தனை செய்யவில்லை.


எனவே, நீங்கள் எவ்வாறு விமர்சிக்க வேண்டும் என்று மற்றவர்களுக்குக் கூறுகின்றீரோ, அந்தப் பண்புகள் உங்களிடமே இல்லை. உங்களின் வாதப்படி உங்களிடமே அடக்கமும் அறிவும் இல்லை என்பதை நீங்களே ஏற்றுக்கொண்டுவிட்டீர். நீங்கள் ஓர் அரைகுறை என்பதை எழுத்தாலும் பேச்சாலும் மட்டுமல்ல, பத்வாக்களாலும் கூட நிரூபித்துள்ளீர்கள். ஒரு முறை சிலாபம் பள்ளியின் ஹவ்லில் நாய் விழுந்த போது, உங்களிடம் ஹவ்லை சுத்தம் செய்வது எவ்வாறு என்று கேட்கப்பட்டபோது, மண்போட்டு ஏழு முறை கழுவ வேண்டும் என்றீர். இதையே சகோ. அகார் முஹம்மதிடம், உங்கள்; பத்வாவை யார் சொன்னது என்று குறிப்பிடாமல் கேட்டபோது, யார் இவ்வாறு அரைகுறை பத்வா வழங்கியது? அது, தவறு. நாயை வெளியே எடுத்து வீசினால் போதும் என்றார். ஆகவே, அகார் முஹம்மதும் உங்களை அரைகுறை என்று கூறியுள்ளார்.


இஸ்லாமிய அடிப்படையை, கலிமாவின் விளக்கத்தை அரை-குறையாகப் புரிந்துகொண்டவர்களை விமர்சிக்கும் தவ்ஹீத்வாதிகளை எல்லாம் அரைகுறை என்று எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? மாதம்பையில் லுஹர் தொழுகையை 5 ரக்ஆத்துக்கள் தொழுவித்துவிட்டு ஸலாம் கொடுத்தீர்கள். அதை நினைவுபடுத்திய பின், நீங்கள் திரும்பத் தொழ வேண்டும் என்று சுடசுட அரைகுறை பத்வா வழங்கினீர்கள். 4 ரகஅத் தொழுகையை மறதியாக 5 ரக்ஆத்துக்கள் தொழுதால், இரண்டு ஷஸஜ்தா செய்ய வேண்டும் என்ற அன்றாடத் தொழுகை சட்டமே தெரியாத அறிவுமகாஞானி நீங்கள், இதையும் மறந்து மற்றவர்களுக்கு அரைகுறை என்கிறீர்களே! ஹஜ்ஜுல் அக்பர் நானா! இது நியாயம்தானா? மத்ரஸா சான்றிதழ் கூட இல்லாத உங்கள் பெயருக்கு முன்னால் 'உஸ்தாத்' பட்டம் எவ்வாறு வந்தது? 'உஸ்தாத்' பட்டம் பெற எவ்வளவு தகுதியும், P.Hன முடித்த பின்னர் பல வருட அனுபவமும் வேண்டும். இவையெல்லாம் உங்களிடம் இருக்கின்றனவா? நீங்களும் ஜாமிஆ நளீமிய்யாவில் துரஅp ழுரவ என்பதை மறந்து, மற்றவர்களை அரைகுறை என்று எழுதுவது உங்களுக்குக் கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா?; இயக்கவாதிகள் மீதான அளவு மிஞ்சிய பாசம், கடந்த காலத்தை எல்லாம் மறக்கடித்துவிட்டதா? அல்லது தவ்ஹீத்வாதிகள் மீதுள்ள வெறுப்பா?


சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள், முஸ்லிம் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் என்று அறிமுகப்படுத்திய சிலரில், செய்யித் குதுப் என்பவரும் ஒருவராவார். இவர் வாழ்ந்த காலப் பகுதியில் உலகில் எங்கும் முஸ்லிம்கள் இல்லை என்று, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் காபிராக்கியவர்! செய்யித் குதுப் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தையும் காபிர் என்றார் என்பதை, அதே இயக்கத்தைச் சேர்ந்த யூசுப் கர்ளாவி தனது ஷஅவ்லியாத்து ஹரகதில் இஸ்லாமிய்யா என்ற நூலில் ஏற்றுக் கொள்கின்றார். இவர் முஸ்லிம் சமூகத்தை அங்கீகரிக்கவே இல்லை. செய்யித் குதுப், மூஸா நபியையும் இப்ராஹீம் நபியையும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும், மூஸா நபியை இனவெறியர் என்றும் கொச்சைப்படுத்தியவர்.

முஸ்லிம் சமூகத்தை அங்கீகரிக்காத இவர், எவ்வாறு முஸ்லிம் உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெறுவார்? பெற முடியும்? சூறா அல் - இஃலாஸுக்கு விரிவுரை (?) வழங்கும் போது, அனைத்திறைவாத(அத்வைத)க் கொள்கையை பிரதிபலித்திருக்கின்றார். அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்றும் எழுதியுள்ளார். இவரது முகத்தில் இஸ்லாத்தின் அடையாளங்கள் கூட இருந்ததில்லை.


யாரடா என்று கேட்கப்பட்ட மேதை யார்? தரீக்கா வழிபாட்டையும், ஷிர்க்கையும், ஷீஆயிஸத்தையும் ஆதரித்தவர், உமர் தில்மஸானி (மூன்றாவது இக்வானியத் தலைவர்- சினிமாத் தியட்டரில் அஸரையும் லுஹரையும் ஜம்வு செய்தவர்) சிகரட் குடித்துக்கொண்டு வந்தபோது, தடுக்கவும் - ஏவவும் மாட்டேன் என்று சொன்னவர். பல இளைஞர்களின் இரத்தத்தை வீணாக ஓட்டியவர். அவர்தான் நீங்கள் போற்றும் மாமேதை ஹஸனுல் பன்னா. P.து. என்றாலும் ஓரளவு கண்ணியமாக விமர்சித்தார். ரபீவு மத்கலி வெறிபிடித்த நாய் என்று எழுதியுள்ளாரே! இதற்கு என்ன சொல்லப் போகின்றீர்கள். மத்கலி ஒரு சமகால மாமேதை. அவரின் உள்ளத்திலுள்ள இஸ்லாத்தின் அறிவுப் பாரம்பரியத்தை ஹஸாபிய்யா தரீக்கா மந்திர சக்தியால் பன்னா கடத்திவிட்டாரா? உலக அதிசயம்தான். தவறான கொள்கைகளை விமர்சித்தால் இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம் எடுபட்டுவிடுமா?


தரீக்கா வழிபாட்டை அங்கீகரித்தோர்தான் மாமேதைகளா? அல்லாஹ் தனது நண்பராக்கிய இப்ராஹீம் நபியை ஒழுக்கம் கெட்டவர் என்று தூற்றியவர்கள் தான் மாமேதைகளா? இவர்களின் கருத்துககளுக்;குத்தான் கண்ணியம் கொடுக்க வேண்டுமா? இவர்களையெல்லாம் முஸ்லிம் சமூகம் எவ்வாறு அங்கீகரிக்கும்? எங்கள் கொள்கை உள்ளத்தில் செய்யித் குதுபைவிட, நபிமார்களும் ஸஹாபாக்களும் மரியாதையில் உயர்ந்து நிற்கின்றார்கள். ஏகத்துவ வாதிகளுக்கும் இயக்கவாதிகளுக்குமிடைலுள்ள வேறுபாடு இங்குதான் வெளிச்சத்திற்கு வருகிறது. ஹஸனுல்பன்னா, மவ்லானா இல்யாஸ் போன்றவர்கள் தரீக்கா சிந்தனை சார்ந்தவர்கள். இவர்கள் முஸ்லிம் உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெறாத, குறுகிய சில ஆதராவாளர்களை மட்டுமே கொண்ட ஜமாஅதே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) போன்ற இயக்கங்களின் ஆதரவை மட்டும் பெற்றவர்கள். நபிமார்களை இனவெறியர்கள், ஹிட்லர் போன்ற அதிகாரத்தை வேண்டியவர்கள் என்றெல்லாம் தூற்றிய இவர்கள், சகோ. ஹஜ்ஜுல் அக்பருக்கும் அவர் தலைமை வழங்கும் ஜமாஅத்தே இஸ்லாமிக்கும், மீள்பார்வைக்கும் வேண்டுமானால், நேசத்திற்குரியவர்களாக தெரியலாம். ஆனால், ஏகத்துவவாதிகளுக்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் இவர்களைவிட பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்களாக உள்ளனர். அதனால்தான் நாம் அல்குர்ஆனையும் நபி வழியையும் மட்டும் பின்பற்ற வேண்டும் என்கின்றோம்.


கண்மூடித்தனமாக எந்த அறிஞர்களின் பின்னாலும் நாம் செல்வதில்லை. தவ்ஹீத் உலமாக்கள் தவறுவிட்டால், எப்படி ஜமாஅதே இஸ்லாமி, ஆகுஊனுகளின் தவறான கருத்துக்களை விமர்சிக்கின்றோமோ, அதேபோன்று விமர்சிக்கின்றோம். தவ்ஹீத்வாதிகளிடம் என்னவன் உன்னவன் என்ற வேறுபாடுகள் இல்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இஸ்லாமியப் பாரம்பரியங்களை இதயத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டு, மனோ இச்சைகளையும் இயக்க நலனையும் பெரிதாக மதிப்பவர்களின் வழி எங்கள் வழி அல்ல என்று உறுதியாகக் கூறுகின்றோம். முஸ்லிம் சமூக அங்கீகாரமற்றவர்களுக்காகவும் இஸ்லாத்தையும் இறைத்தூதர்களையும் அவமதித்தவர்களுக்காகவும் வாதிட்டு, அல்குர்ஆனையும் ரசூல்மார்களையும் ஸஹாபாக்களையும் அவமதிக்கும் ஈனச் செயலுக்கு நாம் ஒருபோதும் துணை நிற்கமாட்டோம்.


'
குர்ஆனிய வசனங்களில் காணப்படுகின்ற அற்புதமான ஓசை நயத்தில் தன்னைப் பறிகொடுத்த அவர் அதில் காணப்படுகின்ற இசை நுணுக்கங்களை விபரிக்கின்றார். துர்மணம் தேடுவோருக்கு அது போதாதா? அவரது மூக்கு இசை என்ற சொல்லில் பட்டுவிடுகிறது. உடனே அந்த சொல்லின் கூடாத வாசம் அவரது மூக்கைத் துளைக்கிறது.' நறுமணம் மூக்குக்குக் அடிப்பது போன்று துர்மணமும் தெரிய வேண்டும். இல்லாவிட்டால், மலத்தையும் பிணத்தையும் உண்ண மனிதன் ஆரம்பித்துவிடுவான். எனவே, நாங்கள் குறை-நிறைகள் இரண்டையும் பேசுகின்றோம். நல்லறிஞர்களிடம் நளினத் தன்மையையும் குறைமதிகளிடமும் முஸ்லிம் உம்மத்தை தவறாக வழிநடாத்தியவர்களிடமும் கடுமையான விமர்சனத் தன்மையையும் கடைப்பிடிக்கின்றோம்.


தவ்ஹீத் அறிஞர்கள், ஜமாஅதே இஸ்லாமியை விமர்சிக்கும் ஒரே காரணத்திற்காக அவர்களின் விமர்சனத்தை மட்டும் குறைகாணும் நீங்கள், அவர்களின் மகத்தான நற்பணிகளை எடுத்துக் கூறியதுண்டா? '...குறைகளை மட்டும் தேடி விமர்சிக்கும் குணமுடையவர்கள் மேதாவித்தனமும் அகம்பாவமும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்' என்று அடுக்கிக் கொண்டே போகின்றீர்கள். அப்படியாயின், P.J. அவர்களும் மற்றும் தவ்ஹீத் அறிஞர்களும் உரையாற்றிய பலவாயிரம் ஏஊனுகள் உள்ளன. ஆவற்றின் அத்தனை நறுமணமும் உங்கள் மூக்குக்குப்படவில்லை. பல்லின மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்ற ஒரே ஒரு உரையில் பேசப்பட்ட உங்களுக்கு பிடிக்காத சொல்லின் கூடாத வாசம் உங்கள் மூக்கைத் துளைத்துவிட்டது. உடனே! அதை விமர்சிக்க ஆரம்பித்துவிடுகிறீர்! அவ்வாறாயின் பல்லின மக்களுக்கு மத்தியில் எவ்வாறு வாழுவது என்று அருமையாக கூறப்பட்ட அத்தனை நறுமணம் கமழும் நல்லறிவுரைகளையும் விடுத்து, குறைமட்டும் தேடிய உங்களிடம் மேதாவித்தனமும் அகம்பாவமும் குடிகொண்டுள்ளது என்றுதானே உங்கள் எழுத்து மூலம் உங்களுக்கு நீங்களே சொல்லியுள்ளீர்கள்.


2005
ல் P.J. இலங்கை வந்த போது, பல பாகங்களிலும் பல்;வேறு தலைப்புக்களில் உரையாற்றினார். இவையெல்லாம் அருமையான, ஆழமான, தர்க்கரீதியான உரைகள். இந்த உரைகளில் அவர் ஜமாஅதே இஸ்லாமி, ஆகுஊனு என்பன மழுப்புவது போன்று, வளையாது, நெளியாது, மழுப்பாது, மறைக்காது அழுத்தமாக உண்மைகளைப் பேசினார். இதை தாங்க முடியாத சகோ. மின்ஹாஜ் இஸ்லாஹி என்பவர் மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தான் என்று அல்ஹஸனாத்தில் எழுதினார். ஆனால், இதே மின்ஹாஜ் சில வருடங்களுக்கு முன்னர் புத்தளத்தில் ஷரீஆ கவ்ன்சில் ஆநநவiபெ போட்ட போது, கற்களுடனும் பொல்லுகளுடனும் சில தடியடி ஜமாஅத் ஊழியர்களுடன் சென்று, மேடையிலுள்ள பொருட்களை உடைத்து, சேதப்படுத்தினார். கருத்தை கருத்தால் வெல்ல முடியாமல், தடியடியால் வெல்ல முனைந்த ஜமாஅதே இஸ்லாமி மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தான் என்று எழுதுவது வேடிக்கைக்குரியதாகும். கருத்தால் புரோகித இயக்கங்களை துணிவாக விமர்சித்த P.J.யை மென்மை இழந்தார் என்று எழுதுவது எவ்வளவு வக்கிரப் புத்தி நிறைந்தது? யார் மென்மையை இழந்தவர்கள். மழுப்பாது, மறைக்காது, தெளிவாக கருத்தை முன்வைத்தவரா? ரவ்டிகளுடன் இணைந்து, வுரடிந டுiபாவகளை உடைத்து, ஷரீஆ கவ்ன்சிலின் மேடையை ரணகளப்படுத்திய ஜமாஅதே இஸ்லாமியா?


ஸஹாபாக்களைத் திட்டித் தீர்க்கும் ஷீஆக்களைக் கண்டித்து நீங்கள் இப்படி ஒரு கட்டுரை எழுதியதுண்டா? ஆயிஷா(ரழி)வை வேசி என்பவர்களை இயக்க அரசியல் நலனுக்காக ஆதரிக்கின்றீர்களே! அபூபக்கரை 'காபிர்' என்று கூறிய சாட்சாத் குமைனியின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்று எழுத எப்படி உங்களுக்குத் துணிவு வருகிறது? ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் கண்ணியமிக்க தாயாக மதிக்கும் ஆயிஷா (ரழி)யை வேசி என்று எழுதிய குமைனியின் புரட்சியை மவ்தூதி : 'இஸ்லாமியப் புரட்சிளூ ) அவர்களைtஅதனை ஆதரிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாஜிப்' என்றார். முஅவியா ( ஏமாற்றுக்காரன், பொய்யன், நயவஞ்சகன் என்றெல்லாம் மவ்தூதி திட்டியுள்ளார். மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! யாரின் உள்ளத்திலிருந்து அல்லாஹ் இஸ்லாமியப் ) போன்றt), மற்றும் அம்ர் (tபாரம்பரியத்தை அகற்றியுள்ளான்? வஹியை எழுதிய முஅவியா ( ஸஹாபாக்களைவிட, சமகாலத்தில் தோன்றிய, கலிமாவுக்குச் சரியான விளக்கம் தெரியாத, அரைகுறை இஸ்லாம் தெரிந்த இயக்கவாதிகள், உங்கள் மதிப்புக்கும் மாண்புக்கும் உரித்தானவர்களாகிவிட்டார்கள்! இது ஏன்? இஸ்லாத்தைவிட இயக்கம் பெரிதானதால் தானே?


இஸ்லாத்தை விட, பன்னாயிஸத்தையும் மவ்தூதியிஸத்தையும், இயக்க நலனையும் பெரிதாக மதிப்பவர்களின் பின்னே செல்பவர்கள் யார்?


கலிமாவுக்குச் சரியான விளக்கம் தெரியாதவர்கள்.
நபிகளாரின் ஸூன்னாவில் ஏற்றத் தாழ்வு பார்ப்பவர்கள்.
ஸூன்னாவுக்கும் பித்அத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்கள்.
ஷிர்க்-பித்அத் என்பவற்றை சில்லறைப் பிரச்சினை என்பவர்கள்.
நபியின் ஹதீஸ்களைவிட தமது இயக்க இஸ்தாபகர்களின் கருத்துகளுக்கு முதலிடம் வழங்குபவர்கள்.
சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட ஸஹாபாக்களைக் காபிர்கள் என்று திட்டும் ஷீஆக்களை வாயாரப் புகழ்ந்து, ஆதரிப்பவர்கள்.
அரசியல் அதிகார ஆசை பிடித்தவர்கள். அதற்காக, பல நல்லறிஞர்களைக் கொலை செய்தவர்கள்.
அரசியல் அதிகாரத்திற்காக அனைத்து வழிகெட்ட இயக்கங்களுடனும் நளினத்தன்மை கடைப்பிடிப்போர்.
ஷிர்க்-பித்அத்,வழிகேட்டு இயக்கங்களை விமர்சிக்கும் தவ்ஹீத்வாதிகளுடன் மட்டும் கடுமை காட்டுவோர்.


மொத்தத்தில், இவர்கள் அல்குர்ஆன் - ஹதீஸ் பற்றிய ஆழமான அறிவற்ற, ஜிஹாத், அரசியல் பற்றிய மேலோட்டமான சில விடயங்களை மட்டும் தெரிந்த உணர்ச்சிக் கோஷதாரிகள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் கூட, எந்த அரசியல் மாற்றத்ததையும் இதுவரை ஏற்படுத்த முடியாத வரண்டுபோன நிலையிலுள்ள இவர்கள்தான், 8மூ முஸ்லிம்கள் வாழும் இலங்கையில், நளைக்கழித்து இஸ்லாமிய கிலாபத்தைக் கொண்டுவருவோம் என்று, கற்பனை உலகில் சிறகு இல்லாமல் பறந்து கொண்டு, தானும் ஏமாந்து, அல்குர்ஆன் - ஹதீஸ் தெரியாத அப்பாவிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.


சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே! நீங்கள் இயக்க சிந்தனைவாதிகளுக்காக வாதாடி, கட்டுரை எழுதி அல்லாஹ்வையும் அல்குர்ஆனையும் அவனது தூதர்களையும் ஹதீஸ்களையும் அகவ்ரவப்படுத்தாதீர்கள். நீங்கள் நேசிப்பவர்களைவிட, இறைத்தூதர்களும் ஸஹாபாக்களும்; கண்ணியமானவர்கள் என்று எண்ணவாவது முயற்சி செய்யுங்கள். அப்போது, அல்லாஹ் அருள் செய்வான், கண்ணியப்படுத்துவான். இல்லாவிட்டால் இழிவுதான் மிஞ்சும். நீங்கள் குறிப்பிட்ட சிலரின் பெயர்களைவிட, தரமான அறிஞர் பட்டியல் உள்ளது. அந்த இஸ்லாமிய அறிஞர்களின் தூய சேவைகளையும் எடுத்துச் சொல்லுங்கள்.


சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே! இஸ்லாத்திற்காக வாதிடுங்கள். இயக்கத்திற்காக வாதிடாதீர்கள். குர்ஆனையும் ஹதீஸையும் சாதாரண மனிதர்களின் கருத்துக்களைவிட மேன்மையானதாக மதியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலித்து, மார்க்க ஞானத்தையும் அதில் தெளிவையும் வழங்குவானாக!


.