Friday, December 18, 2009

அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே ! இணையத்தள வாசகர்களே !

அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே ! இணையத்தள வாசகர்களே !

அல்லாஹ்வின் திருப் பெயரால்…..

அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே ! இணையத்தள வாசகர்களே !
உண்மை உதயமாகிறது என்ற இந்த இணையத்தளத்தின் முலமாக உதயமாகாத பல உண்மைகளை நாம் வெளிக்கொணர எண்ணியுள்ளோம்.அந்த வகையில் இலங்கையில் தஃவாக் களத்தில் தாஇகளாக தங்களை இணங்காட்டிக் கொண்டிருக்கும் சிலர் உண்மையான மார்க்கத்தை மக்களுக்கு சொல்வதற்குப் பதிலாக ஓடி ஒழிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

இவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் ?

இவர்கள் சொல்வது சத்தியம் என்றால் மக்கள் மன்றத்தில் விவாதிக்களாமே !

விவாதிப்பதற்க்கு இவர்கள் பயப்படுவதிலிருந்து இவர்கள் சத்தியத்தில் இல்லை மக்களைக் குழப்புவதற்க்காகத்தான் இப்படி செய்கிறார்களோ என பாமர மக்கள் எண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படிப் பட்டவர்களிடம் செய்யப் பட்ட கருத்துப் பரிமாற்றங்கள் கட்டுரைகளாகவும், வீடியோ, ஆடியோப் பதிவுகளாகவும் மக்கள் மன்றத்தில் எத்திவைப்பதற்க்காகவே இந்த இணையம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது என்பதை மிகவும் அன்பாய்த் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்

Wednesday, December 16, 2009

இஸ்மாயீல் ஸலபிக்கு சகோ : றஸ்மின் அவர்களின் பதில்.

بسم الله الرحمن الرحيم
பகிரங்க சவால் - ஒரு தெளிவு (ஓர் ஆய்வு)
அன்புள்ள கொள்கைச் சகோ:இஸ்மாயீல் ஸலபி அவர்களுக்கு எப்.எம்.ரஸ்மினின் ஸலாம்…..

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ_.

தாங்கள் எழுதி மக்களுக்கு மத்தியிலே வினியோகித்திருந்த ஒரு துண்டுப் பிரசுரத்தின் நகலை எனக்கும் அனுப்பித் தந்தமைக்கு ஜஸாகல்லாஹ_ ஹைரா.
அத்துடன் அந்த பிரசுரத்தின் சில விஷயங்களை உங்களுக்கு சுட்டிக்காட்டும் முகமாகவே இந்த கடிதத்தை உங்களுக்கு நான் வரைகிறேன்.
அந்தப் பிரசுரத்தை தாங்கள் தக்லீதையும்,தனிநபர் வழிபாட்டையும் வளர்க்கும் நோக்கில் உருவான,உருவாக்கப் பட்ட ஒரு குழு உண்மை உதயம் ஆசிரியருக்கு பகிரங்க சவால் என்ற தலைப்பில் என்னை விவாதத்திற்கு அழைத்து துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருந்தது.இது குறித்து சில தெளிவுகளை கொள்கைச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்தப் பகிரங்க மடல் முலம் உங்களைச் சந்திக்கின்றேன்.என்று எழுதியுள்ளீர்கள்.

முதலில் தக்லீதையும்,தனிநபர் வழிபாட்டையும் வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு குழு என்று உங்கள் கடிதத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள்.நீங்கள் குறிப்பிடும் இந்தச் செய்தி உண்மைதானா?என்பதைப் பார்ப்போம்.

உண்மையில் இலங்கையில் தற்போது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் முலம் உருவாக்கப் பட்ட அந்த அமைப்பைச் சேர்ந்த சகோதரர்கள் தக்லீத் வாதிகளா,தனிநபர் வழிபாடு நடத்துபவர்களா?என்றால் இல்லை ஏன் என்றால் அவர்கள் உண்மையில் நீங்கள் சொல்வதைப் போன்றவர்கள் என்றால் உங்களை ஏன் விவாதத்திற்கு அழைக்க வேண்டும்? பி.ஜெ சொல்வதையே தக்லீத் செய்திருக்களாமே? அவர்கள் உங்களுக்கு விவாத அழைப்பு விடுத்ததிலிருந்து யார் சொல்வது உண்மையென்பதை அவர்கள புரிய முற்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?அல்லது தெரிந்து கொள்ள நீங்கள் முற்படவில்லையா?

தக்லீதையும்,தனிநபர் வழிபாட்டையும் அடியோடு அழித்துவிடத் துடிக்கும் தௌஹீத் உலமாக்கலே இப்படி எழுதலாமா?

வேதத்தைப் படித்துக் கொண்டே உங்களை மறந்து விட்டு மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா?நீங்கள் சிந்திக்க வேண்டாமா?(2:44)

அடுத்ததாக:
என்னை விவாதத்திற்கு அழைத்தவர்கள் அந்தப் பிரசுரத்தை எனக்கு அனுப்பாமல் கொழும்பு,எலபடகம,அக்குரனை போன்ற இடங்களில் பங்கிட்டுள்ளனர்.அவர்களிடம் நியாய உணர்விருந்தால் எனக்கல்லவா அனுப்பவேண்டும்?அவர்கள் இந்தப் பிரசுரம் முலம் பரபரப்பையும்,பப்ளிசிட்டியையுமே ஏற்படுத்த விரும்பியுள்ளனர்.இதன் முலம் தெளிவாகியுள்ளது.அதிரடி அரசியல் வாக்கில் ஆதாயம் தேட முற்பட்டுள்ளனர்.இவர்களைப் புறக்கணிக்காமல் அழைப்பை ஏற்பது அவர்களது கீழ்த்தரமான உணர்வுக்கு உதவுவதாக அமைந்து விடும்.என்று எழுதியுள்ளீர்கள்.
முதலாவதாக யார் உங்களை விவாதத்திற்கு அழைத்து பிரசுரம் வெளியிட்டாலும் நீங்கள் இப்படித்தான் அவர்களை அனுகியுள்ளீர்களா? உங்கள் கையில் விவாத அழைப்பைத் தந்தால்த்தான் விவாதத்திற்கு சென்றுள்ளீர்களா? வெருமெனே விவாத அழைப்பு என்று அழைத்து பிரசுரம் வெளியிட்டவர்களுடனும் விவாதிக்க தயார் என்று அழைக்கத்தானே செய்தீர்கள்?

தப்லீக் ஜமாத்,ஜமாஅதுல் முஸ்லீமீன்,தரீக்கா,காதியானிகள் என யார் அழைப்பு விடுத்து பிரசுரம் போட்டாலும் உடனுக்குடன் பதில் அழித்த நீங்கள் இந்தப் பிரசுரத்திற்கு மாத்திரம் என் கையில் தந்தால்த்தான் விவாதத்திற்கு போயிருப்பேன் என்று கூறுவது வேறுவிதமாக மக்களைச் சிந்திக்கத் தூண்டுமே தவிற தாங்களை நியாயவானாக எடுத்துக் காட்டாது.
அத்துடன் அவர்கள் இந்தப் பிரசுரம் முலம் பரபரப்பையும்,பப்ளிசிட்டியையும் விரும்பி அதிரடி அரசியல் ஆதாயம் தேட முற்பட்டுள்ளனர் எனக்கூறியுள்ளீர்களே! உண்மையில் அவர்கள் புகழை விரும்பியிருந்தால் உங்களை விவாதத்திற்கு அழைத்து விட்டு ஒழிந்திருக்க முடியும் ஆனால் தாங்கள்தான் ஸலபியை விவாதத்திற்கு அழைத்தவர்கள் என்று இதுவரையும் உங்கள் விவாத சம்மதத்தை எதிர்பார்த்து அவர்கள் இருக்க வேண்டிய தேவை இல்லையே?

அதுமட்டுமல்லாமல் அவர்களது விவாத அழைப்பை ஏற்பது அவர்களது கீழ்த்தரமான உணர்வுக்கு உதவுவதாக அமைந்து விடும் அதனால்த்தான் நான் விவாத அழைப்பை ஏற்கவில்லை எனக்கூறியுள்ளீர்கள்.
அப்படியானால் நீங்கள் எந்தக் கருத்தைச் சொன்னாலும் அதை எதிர்த்து எவர் விவாத அழைப்பு விடுத்தாலும் அவர்கள் அத்தனை பேரும் உங்கள் பார்வையில் கீழ்த்தரமானவர்கள்?அப்படித்தானே?

அதுமட்டுமல்லாது தாங்கள் வெளியிட்டிருக்கும் இந்தப் பிரசுரத்தை உங்களை விவாதத்திற்கு அழைத்த தமிழக உலமாக்கல் இலங்கையில் பிரச்சாரம் செய்யும் போதே வெளியிட்டிருக்களாமே?
அப்படி வெளியிட்டு இருந்தால் நீங்கள் விரும்புவதைப் போல் அவர்கள் உங்கள் கையிலேயே அழைப்பைத் தந்திருப்பார்களே?ஏன் அவர்கள் தமிழகத்திற்கு வந்ததின் பின்னால் இப்படி அதிரடி,ஆதாய,அரசியல் அனுகு முறை?

அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்.(2:42)

உண்மை உதயம் எனும் பெயரில் இருளை உதயமாக்கும்…..என்று
எழுதியுள்ளனர்.என்று கூறி உண்மை உதயத்தில் இவ்வளவு காலமும் எழுதப்பட்ட அனைத்து செய்திகளும் பொய்யானவை எனக்கூற முற்பட்டுள்ளனர் எனக் கூறுகிறீர்கள்.

ஆனால் அவர்கள் தாங்கள் சூனியம் விஷயமாக எழுதியதற்காக மாத்திரம் தான் அப்படி சொல்லியுள்ளனரே தவிர மற்ற எதற்கும் சொல்லவில்லை என்பதை அந்தப் பிரசுரத்தைப் படிக்கும் எவறும் அறிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் இதுவரையில் குர்ஆன் ஹதீஸைத்தான் உண்மை உதயம் சொல்கிறது என்று கூறும் நீங்கள் பி.ஜெ யின் கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வதை விட்டு பி.ஜெ பகுத்தரிவாளர் (ஹதீஸ்களை சிந்தைனையால் எதிர் கொள்பவர்)என்று அவரை விமர்சித்தது எந்த குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் உள்ளது.

அது போல் இவர்களது நோக்கம் மார்க்கத்தை தெளிவு படுத்துவது அல்ல பி.ஜெ யைக் காப்பாற்றுவதுதான்.எனக் கூறியுள்ளீர்கள்.தாங்கள் சொல்வது தான் உண்மை நிலை என்றால் பி.ஜெ உடைய ஒவ்வொரு கருத்தையும்,தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் ஆலிம்கள் ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லையே?அப்படியே காப்பியடிக்கலாமே?

ஆனால் ஒவ்வொரு கருத்தையும் இங்குள்ள ஆலீம்கள் ஆய்ந்துதான் பின்பற்றுகிறார்கள்.நீங்கள் நினைப்பதைப் போல் தக்லீத் செய்யவுமில்லை.மற்ற ஆலிம்களைப் போல்(தங்களைப் பற்றித் தெரியாது) ஸலபுகள் செய்திருக்கிறார்கள்,அல்பானி சொல்லி விட்டார்,அப்துல்லாஹ் பின் பாஸ் சொல்லி விட்டார் என்று அவர்களைப் பின்பற்றுவதைப் போல் பி.ஜெ சொல்வதைக் கண்முடிப் பின்பற்றுவதும் இல்லை என்பதை மிகவும் அன்பாய்த் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும்,சூனியம் எனும் வார்த்தை எத்தனை இடத்தில் இருக்கிறது என்பதை மட்டுமே ஆய்வு காட்டியது. (ஆய்வு என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி) மிகுதி எல்லாம் சுத்த-சூனியம் என்பதுதான் வாசித்தோருக்குத் தெரியும் என்று எழுதியுள்ளனர். ஆனால், அவர்களது நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் அதில்தான் எலபடகம, அக்குரணை, சிலாபம் என சுத்த-சூனியமாக இருந்தது.என எழுதியுள்ளீர்கள்.

ஒரு பேச்சுக்காக அவர்களுடைய நிகழ்ச்சி நிரல்தான் சுத்த சூனியம் என்றே வைத்துக் கொண்டாலும்.வந்தவர்களை ஒரு இடத்தில் கூட பேச விடக்கூடாது என்பதற்காக எடுக்கப் பட்ட முயற்சிகள்தான் எத்தனை?

அவர்கள் நிகழ்ச்சி செய்த இடங்களுக்கெல்லாம் தொடர்பு கொண்டு நீங்கள் எப்படி அவர்களுக்கு இடம் கொடுத்தீர்கள் நீங்கள் அவர்களுக்கு இடம் கொடுத்த காரணத்தால் நாங்கள் அந்த இடங்களுக்கு பிரச்சாரத்திற்கு வருவதை மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.என்று நீங்கள் உள்ளிட்ட சிலர் கூறியதாகவும் நாம் நமக்குத் தெரிந்த சில அன்பர்கள் முலம் கேள்விப்பட்டோம்.இதற்கு என்ன பதில் தரப்போகிறீர்கள்?

அடுத்து அதன் தொடர்ச்சியாக,நமது ஒரு கட்டுரைக்கு மறுப்பாக அமைய, தமிழ் நாட்டிலிருந்து வந்த இரண்டு ஹதீஸ் கலை ஆய்வாளர்கள் நான்கு இடங்களில் பேசவேண்டி ஏற்பட்டதென்றால், அந்தக் கட்டுரை அவர்களை எவ்வளவு கதிகலக்கியுள்ளது என்பது கொள்கைச் சகோதரர்களுக்குப் புரியும். உங்கள் நிகழ்ச்சி ஏற்பாடும், துண்டுப்பிரசுரமும் அந்தக் கட்டுரை சுத்த-சூனியமல்ல உங்களது சூனியம் குறித்த குருட்டு வாதங்களிலிருந்து மக்களைக் காக்கும் ஆய்வு என்பதையே உணர்த்துகின்றது.
என எழுதியுள்ளீர்கள்.
உண்மையில் அவர்கள் உங்கள் கட்டுரைக்கு மறுப்புப் பேசுவதற்காகத்தான் தமிழகத்திலிருந்து வந்தார்கள் என்று எண்ணி எழுதியுள்ளீர்கள்.அத்துடன் நீங்கள் எழுதிய கட்டுரை அவர்களை கதிகலக்கியதாகவும் எண்ணுகிறீர்கள்.உண்மை நிலை அதுவல்ல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒரு விஷயத்தை ஆய்வு செய்து ஒரு முடிவை தெரிவித்த பின் அதை யாராவது விமர்சித்து பேசியோ,அல்லது எழுதியோ இருந்து விமர்சிப்பவர்கள் சொல்லும் கருத்துத்தான் உண்மையென்றிருந்தால் அதைத் தயங்காமல் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இதே நேரம் விமர்சிப்பவர்களின் முடிவு தவராக இருந்தால் அவர்களைத் தயங்காமல் விவாதக் கலத்திலும் சந்தித்திருக்கிறது.

இதனடிப்படையிலேயே எதிர்வரும் 20009-03-29 அன்று கூட தொன்டியில் சகோ:பி.ஜெ அவர்களின் குர்ஆன் மொழி பெயர்ப்பில்த் தவறுகளா? என்ற தலைப்பில் பி.ஜெ மற்றும் முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் விவாதிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை எவராலும் செய்யவும் முடியாது. இதுவே தௌஹீத் ஜமாஅத்தின் ஆணித்தரமான நிலைப்பாடாகும்| என்று எழுதியுள்ளனர். நான் பீஜேயின் சூனியம் என்றால் தந்திர வித்தை என்ற தவறான வாதத்திற்கே இதுவரை விளக்கம் எழுதியுள்ளேன். இவர்கள், நபி (ஸல்) அவர்களின் சூனியம் விடயத்திற்கு ஏன் தாவினர்? எழுதாத விடயத்திற்கு ஏன் விவாதத்திற்கு அழைக்கின்றனர்? என சகோதரர்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். பீஜேயின் இந்தக் கருத்தில் அவர்களுக்கோ தமிழகத்திலிருந்து வந்தவர்களுக்கோ தெளிவு இல்லை என்று நான் துணிந்து கூறுவேன்.என்றும் எழுதியுள்ளீர்கள்.

அப்படியானால் இன்ஷா அல்லாஹ் நீங்கள் கட்டுரையை முழுவதுமாக எழுதியதின் பின் விவாதத்திற்கு அழைத்தால் செல்வீர்களா?

அது போல்,
தௌஹீத் ஜமாஅத் பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது என்று எழுதியுள்ளனரே! அப்படியென்றால் நான் எந்த ஜமாஅத்?

உங்களை யாரும் தவ்ஹீத் ஜமாத் அல்லாதவர் என்று கூறவே இல்லை.நீங்கள் எப்படி ஜமாத் அன்ஸார் சுன்னதில் முஹம்மதியா என்ற அமைப்பில் இருக்கிறீர்களோ அது போல் அந்த சகோதரர்கள் தங்கள் ஜமாத்திற்கு வைத்திருக்கும் பெயர் அது அதனால்த்தான் தவ்ஹீத் ஜமாத் அழைக்கிறது என்று எழுதினார்கள் ஒரு வாதத்திற்கு உங்களை தவ்ஹீத்வாதியாக கருதாமல்த்தான் அவர்கள் அப்படி எழுதினார்கள் என்று வைத்துக் கொண்டாலும்,உங்களிடமும் அது போன்ற கேள்வி வரும்.
அதாவது தாங்கள் தங்களுடைய பெயரை எழுதி விட்டு அதன் பின்னால் ஸலபி என்று எழுதுகிறீர்களே? அப்படி ஸலபி என்று நீங்கள்; எழுதுவதால் நாங்கள் உங்களைப் பார்த்து இவர் ஸலபி என்று தன்னைச் சொல்கிறார் அப்படியானால் நாங்கள் யார்? என்று கேட்க முடியுமா? அப்படி நீங்கள சிலர் ஸலபி என்பதால் அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மற்றவர்கள் ஸலபி இல்லை என்றாகி விடுமா?

இது போல் தான் தவ்ஹீத் ஜமாத் விவாதத்திற்கு அழைக்கிறது.என்ற வார்த்தையும் என்பதைப் புரிய முற்படுங்கள்.

அடுத்ததாக இப்படியெல்லாம் கூறி முடித்த நீங்கள்’

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள் அறிவீனர்கள் தங்களுடன் உரையாடும் போது ஸலாம் எனக் கூறுவார்கள்.(25:63)
பெருந்தன்மை கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!(7:199)

ஆகிய இரு குர்ஆன் வசனங்களைக் காட்டி விவாதத்திற்கு அழைத்தவர்கள் முடர்கள்,அறிவீனர்கள் அவர்களுடன் நான் விவாதிக்கத் தயாரில்லை அவர்களை நான் புறக்கணிக்கிறேன் என்று கூறியுள்ளீர்கள்.அத்துடன் இதன் பின்னர் இவர்களது எந்த விமர்சனத்திற்கும் என்னிடம் விளக்கம் எதிர்பார்க்காதீர்கள். இவர்களைப் புறக்கணித்து விட்டு, எனது பணிகளை நான் தொடர முடிவு செய்துள்ளேன்.எனக்கூறி முடித்து விட்டீர்கள்.

தாங்கள் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறீர்கள்,அந்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்கள் இது பற்றி விவாதிப்போம் அதில் நீங்கள் சொல்வது சரியென்றால் நாமும் நாம் சொல்வது சரியென்றால் நீங்களும் ஏற்றுக் கொள்வோம் என்று தங்களை யாராவது அழைத்தால் அவர்கள் முடர்கள்,அறிவீனர்கள்.(உங்கள் வாதப்படி)

ஆனால் உண்மை நிலை என்னவென்றால் தாங்கள் சொன்ன கருத்தை தங்களால் உருதிப்படுத்த முடியவில்லை,தான் சொல்வது உண்மை என்பதை நிருபிக்கத் தயங்குகிறீர்கள்.
ஆனால் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

வேதத்தைப் படித்துக் கொண்டே உங்களை மறந்து விட்டு மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?(2:44)
கடைசியாக:
உண்மை வந்து விட்டது பொய் அழிந்து விட்டது பொய் அழியக்கூடியதாகவே உள்ளது என்றும் கூறுவீராக!(17:81)
இன்ஷா அல்லாஹ் எது உண்மை எது பொய் என்பதை அல்லாஹ் ஒரு நாள் நிருபித்தே தீருவான் என்று கூறி இந்த மடலை நிறைவு செய்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரினதும் நோக்கங்களை நல்லதாகவே மாற்றுவானாக!
குறிப்பு:
இது வரை நான் தாங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்களில் ஏதாவது குர்ஆன்,ஹதீஸிற்கு மாற்றமாக இருக்குமானால் அல்லாஹ்வுக்காக அதைப் பொருத்துக் கொள்வதுடன்,எனக்கும் சுட்டிக் காட்டுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்:
பளளுவௌ எப்.எம்.ரஸ்மின்,
இஸ்லாமியக் கல்லூரி,
கடையநல்லூர்,தமிழ் நாடு.

இஸ்மாயீல் ஸலபி அவர்கள் வெளியிட்ட பிரசுரம்.

பகிரங்க சவால் - ஒரு தெளிவு

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு உண்மை உதயம் இஸ்லாமிய இதழின் ஆசிரியர் எஸ்.எச்.எம். இஸ்மாயீல் ஸலபியின் ஸலாம்... அஸ்ஸலாமு அலைக்கும்.

தக்லீதையும், தனிநபர் வழிபாட்டையும் வளர்க்கும் நோக்கில் உருவான-உருவாக்கப்பட்ட ஒரு குழு உண்மை உதயம் ஆசிரியருக்குப் பகிரங்க சவால் என்ற தலைப்பில் என்னை விவாதத்திற்கு அழைத்து துண்டுப்பிரசுரம் வெளியிட்டிருந்தது. இது குறித்துச் சில தெளிவுகளை கொள்கைச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்தப் பகிரங்க மடல் மூலம் உங்களைச் சந்திக்கின்றேன்.

என்னை விவாதத்திற்கு அழைத்தவர்கள் அந்தப் பிரசுரத்தை எனக்கு அனுப்பாமல் கொழும்பு, எலபடகம, அக்குரணை போன்ற இடங்களில் பங்கிட்டுள்ளனர். அவர்களிடம் நியாய உணர்விருந்தால் எனக்கல்லவா அனுப்ப வேண்டும்? அவர்கள் இந்தப் பிரசுரம் மூலம் பரபரப்பையும், பப்ளிசிடியையும் ஏற்படுத்த விரும்பியுள்ளனர் என்று இதன் மூலம் தெளிவாகின்றது. அதிரடி அரசியல் வாக்கில் ஆதாயம் தேட முற்பட்டுள்ளனர். இவர்களைப் புறக்கணிக்காமல் அழைப்பை ஏற்பது அவர்களது கீழ்த்தரமான உணர்வுக்கு உதவுவதாக அமைந்து விடும்.

உண்மை உதயம் எனும் பெயரில் இருளை உதயமாக்கும்... என்று எழுதியுள்ளனர். உண்மை உதயம் 1955 இல் உதயமான குர்ஆன்-ஸ{ன்னாவைப் போதிக்கும் பத்திரிகையாகும். எனது பொறுப்பில் இதுவரை 114 இதழ்கள் வெளிவந்துள்ளன. பீஜேயின் ஒரு கருத்துக்கு முரணாக ஒரு கட்டுரை எழுதியதற்காக இருளை உதயமாக்கும் என்று எழுதியுள்ளனரே! அப்படியென்றால் இதுவரை நான் எழுதிய குர்ஆன்-ஹதீஸ் அனைத்தும் பீஜேயின் ஒரு கருத்துக்கு முரண்பட்டு எழுதியதால் இருளாகி விட்டனவா? குர்ஆன்-ஹதீஸ் மீது பற்றோ, பாசமோ உள்ள எவராவது இப்படி எழுதுவார்களா? பீஜே மீது கொண்ட தக்லீதின் காரணத்தால், அவருக்கு முரணாக ஒருவன் கருத்துச் சொன்னால், அவனது அனைத்துக் கருத்தையும் மறுக்கும் வெறி கொண்ட மனோபாவத்தில் இருக்கும் இவர்களைப் புறக்கணிப்பதே இஸ்லாமிய வழி என்று நான் கருதுகின்றேன்.

அல்லது இதுவரை உண்மை உதயம் இருளைத்தான் உதயமாக்கி வந்தது என்றால் ஏன் இதற்கு முன்னர் இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை? என்று சிந்தித்துப் பாருங்கள்! ஆம். நீங்கள் குர்ஆன்-ஹதீஸ{க்கு முரணாக எழுதினாலும் பிரச்சினை இல்லை@ பீஜே க்கு முரணாக எழுதினால் விட மாட்டோம் என்ற முற்றிப்போன பீஜே பக்தி இவர்களிடம் இருப்பதை உணரலாம்.

~மறுக்கப்படும் ஆதாரப+ர்வமான ஹதீஸ்கள்| எனும் தலைப்பில் மறுக்கப்படவேண்டிய கருத்துக்களைச் சொல்லி இருந்தது உங்கள் உண்மை உதயம் என்று எழுதியிருந்தனர். மறுக்கப்படவேண்டிய கருத்து எது? பீஜே காதியானிகளுடன் விவாதம் செய்ததையா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி செய்ததையா? அல்லது ஆரம்பத்தில் குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படாது@ முரண் போல் தோன்றினாலும் முரண் இருக்காது என்று கூறியதையா? அல்லது பீஜே சூனியம் என்றால் வெறும் தந்திரவித்தை என்று கூறுவதை நான் மறுத்ததையா?

பீஜேயை ~ஹவாரிஜ் முஃதஸிலா| என்று கூறுமளவில் இருந்தது அந்த ஆய்வு என்று குறிப்பிட்டுள்ளனர். நான் எனது கட்டுரையில் அப்படிக் குறிப்பிடவில்லை. பகிரங்கமாக எழுதிய விடயத்திலேயே துணிந்து அவதூறு கூறும் இவர்களின் இலட்சணம் எப்படி இருக்கும்? என்று சிந்தித்துப் பாருங்கள்!

நான் எழுதிய மார்க்கத்துக்கு முரணான எந்த அம்சத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டாமல், பீஜேயை ஹவாரிஜ் முஃதஸிலா என்று கூறும் அளவில் இருந்தது அந்த ஆய்வு என்று கூறியிருப்பதிலிருந்து, இவர்களுக்கு மார்க்கம் பிரச்சினையில்லை@ பீஜேயைப் பாதுகாப்பதே இவர்களின் இலட்சியம் என்பது தெளிவாகின்றதல்லவா?

சூனியம் எனும் வார்த்தை எத்தனை இடத்தில் இருக்கிறது என்பதை மட்டுமே ஆய்வு காட்டியது. (ஆய்வு என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி) மிகுதி எல்லாம் சுத்த-சூனியம் என்பதுதான் வாசித்தோருக்குத் தெரியும் என்று எழுதியுள்ளனர். ஆனால், அவர்களது நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் அதில்தான் எலபடகம, அக்குரணை, சிலாபம் என சுத்த-சூனியமாக இருந்தது!
நமது ஒரு கட்டுரைக்கு மறுப்பாக அமைய, தமிழ் நாட்டிலிருந்து வந்த இரண்டு ஹதீஸ் கலை ஆய்வாளர்கள் நான்கு இடங்களில் பேசவேண்டி ஏற்பட்டதென்றால், அந்தக் கட்டுரை அவர்களை எவ்வளவு கதிகலக்கியுள்ளது என்பது கொள்கைச் சகோதரர்களுக்குப் புரியும். உங்கள் நிகழ்ச்சி ஏற்பாடும், துண்டுப்பிரசுரமும் அந்தக் கட்டுரை சுத்த-சூனியமல்ல@ உங்களது சூனியம் குறித்த குருட்டு வாதங்களிலிருந்து மக்களைக் காக்கும் ஆய்வு என்பதையே உணர்த்துகின்றது!

அடுத்து, அந்த மூன்று பேரின் முடிவுதான் உண்மை உதய வாசகர்களின் முடிவு என்று எண்ணி எழுதியிருப்பது இவர்களின் அறியாமையை அம்பலப்படுத்துகின்றது.

~நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை@ எவராலும் செய்யவும் முடியாது@ இதுவே தௌஹீத் ஜமாஅத்தின் ஆணித்தரமான நிலைப்பாடாகும்| என்று எழுதியுள்ளனர். நான் பீஜேயின் சூனியம் என்றால் தந்திர வித்தை என்ற தவறான வாதத்திற்கே இதுவரை விளக்கம் எழுதியுள்ளேன். இவர்கள், நபி (ஸல்) அவர்களின் சூனியம் விடயத்திற்கு ஏன் தாவினர்? எழுதாத விடயத்திற்கு ஏன் விவாதத்திற்கு அழைக்கின்றனர்? என சகோதரர்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். பீஜேயின் இந்தக் கருத்தில் அவர்களுக்கோ தமிழகத்திலிருந்து வந்தவர்களுக்கோ தெளிவு இல்லை என்று நான் துணிந்து கூறுவேன்.

தௌஹீத் ஜமாஅத்தின் கருத்து என்று நேற்று முளைத்தவர்கள் கூறுகின்றனரே! இது நியாயமானதா? நாமும் தௌஹீத் ஜமாஅத்துத்தான். ஷபாப்இ ஐஐசுழுஇ யுஊவுதுஇ ஐயுவு அனைவரும் தௌஹீத்வாதிகள்தாம். இப்படி இருக்க, அவர்கள்தான் தௌஹீத்வாதிகள் என்ற அடிப்படையில் எழுதி, இந்த நாட்டின் தௌஹீத் பிரச்சார வரலாற்றையே திருட முனையும் இவர்கள் எப்படி நியாயமானவர்களாக இருப்பார்கள்?

தௌஹீத் ஜமாஅத் பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது என்று எழுதியுள்ளனரே! அப்படியென்றால் நான் எந்த ஜமாஅத்?

பீஜே என்ன எழுதினார் என்பது எல்லோருக்கும் தெரியும்@ நான் என்ன எழுதுகிறேன் என்பதைப் பார்த்துத்தானே முடிவு செய்ய வேண்டும்? நான் என்ன எழுதுவேன் என்று தெரியாமலேயே விவாதத்திற்கு அழைக்கின்றனர் என்றால் அடுத்தவரின் கருத்தைக் கவனத்திற் கொள்ளும் போக்கே இவர்களிடத்தில் இல்லை என்பதுதானே அர்த்தம். எனவே, கண்ணியத்திற்குரிய கொள்கைச் சகோதரர்களே!

‘ அர்ரஹ்மானின் அடியார்கள் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால், 'ஸலாம்" எனக் கூறுவார்கள். (25:63)

‘ (நபியே!) நீர் மன்னிப்பைக் கடைப் பிடித்து, நன்மையை ஏவி, அறிவீனர்களைப் புறக்கணித்து விடுவீராக! (7:199)

ஆகிய ஆயத்துக்களின் அடிப்படையில் இவர்களைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன். இதன் பின்னர் இவர்களது எந்த விமர்சனத்திற்கும் என்னிடம் விளக்கம் எதிர்பார்க்காதீர்கள். இவர்களைப் புறக்கணித்து விட்டு, எனது பணிகளை நான் தொடர முடிவு செய்துள்ளேன். முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையும், முஃமின்களுக்கு தீங்கிழைப்பதையும் நோக்கமாகக் கொண்டு முனாஃபிக்குகளால் கட்டப்பட்ட பள்ளியில் தொழ வேண்டாம் என அல்லாஹ் தடுக்கின்றான்(9:107). தௌஹீத்வாதிகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதற்காகவும், தௌஹீத் சகோதரர்களுக்குத் தீங்கிழைப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட இந்தக் குழுவை, நீங்களும் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று அன்புடனும், உரிமையுடனும், பணிவுடனும் வேண்டிக் கொள்கின்றேன்.

இப்போது இந்தக் குழுவை வழிநடத்துவோர் 'மேமன் தௌஹீத் ஜமாஅத்" என்ற பெயரில் ஆரம்பத்தில் தௌஹீத்வாதிகளை இனவாரியாகப் பிரிக்க முற்பட்டவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு இவர்களைப் புறக்கணியுங்கள். மற்றப்படி உண்மை உதயத்திற்கு இலவச விளம்பரம் தந்ததற்காக இவர்களுக்கு நன்றி கூறி மடலை நிறைவு செய்கின்றேன்.

அன்புடன்
ளு.ர்.ஆ. இஸ்மாயீல் (ஸலபி)
உண்மை உதயம்
இஸ்லாமிய மாத இதழ்

பகிரங்க ஸவால் ஓர் தெளிவு (ஓர் ஆய்வு)

அல்லாஹ்வின் திருப் பெயரால்…….
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏகத்துவப் பிரச்சாரத்திற்க்காக சகோ அப்பாஸ் அலி அவர்கள் வந்திருந்தது அனைவரும் அறிந்ததே.

அப்போது சூனியம் தொடர்பாக மௌலவி இஸ்மாயில் ஸலபி அவர்கள் கூறிவருகின்ற கருத்துக்கள் தவறானது என்றும் அதை தான் பகிரங்க விவாதக்களத்திலேயே தான் நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி பகிரங்க ஸவால் ஒன்றை விடுத்திருந்தார்.

அதற்க்கு இஸ்மாயீல் ஸலபி அவர்கள் பகிரங்க ஸவால் ஒரு தெளிவு என்ற தலைப்பிட்டு தான் விவாதத்திற்கு தயார் இல்லை என்பதை பகிரங்கமாகவே துண்டுப் பிரசுரம் மூலமாக ஒத்துக் கொண்டார்.

அப்படி அவர் ஒப்புக் கொண்டு அறிவித்த அந்த பிரசுரத்திலே பல கருத்துக்களை முன்னுக்குப் பின் முரனாகக் குறிப்பிட்டு இருந்தார்.

அந்தப் பிரசுரத்திற்க்கு சகோதரர் றஸ்மின் (இஸ்லாமியக் கல்லூரி மாணவர் கடையநல்லூர்) அவர்கள் ஒரு மறுப்புக் கடிதத்தை மௌலவி இஸ்மாயீல் ஸலபி அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தின் பிரதியை அப்படியே தருகிறோம்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.