Thursday, February 18, 2010






உண்மை உதயமாகிறது...! போ­களின் முகத்திரை கிழிகிறது...?

கொள்கை சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

இலங்கையில் தவ்ஹீத் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எழுச்சி பெற்று,வளர்ந்து வந்தது. இதற்கு துவக்க காலத்தில் முக்கிய பங்களிப்பாற்றிய அப்துல் ஹமீத் பக்ரி அவர்களின் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத உறுதியான நிலைப்பாடுதான் காரணமாக அமைந்தது. எனினும், இன்று அவரின் பெயரைப் பயன்படுத்தி, தவ்ஹீத் முகவரியுடன் பித்அத்திற்குப் பள்ளிகட்டி, கிணறு வெட்டி வயிறு வளர்க்கும் கூட்டத்தினர் தவ்ஹீதை விட்டுத் தடம் புரண்டு, வழிகேடர்களோடு இணைந்து, கலந்து காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர். எனவே, இவர்களால் தவ்ஹீதுக்குச் செய்யப்படும் இந்த துரோகம் பற்றி விமர்சிக்கும் போது, தவ்ஹீத் வாதிகளுக்கு மத்தியில் இது தேவைதானா என்ற ஒரு கேள்வி இன்று பலர் மத்தியிலும் எழுகிறது. நிதி நிறுவனங்கள் பீஜேவை தரக்குறைவா விமர்சித்த போது, மவ்னம் காத்த இந்த நடுநிலவாதிகள் இப்போது கேள்வி எழுப்புவது இவர்களின் நடுநிலையை வெளிக்காட்டுகிறது. முஸ்­ம் என்ற பெயரை தாங்கிக் கொண்டு, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் போது, எவ்வாறு அந்த ஷிர்க் தகர்க்கப்படுவது முக்கியமோ, அது போன்றுதான் தவ்ஹீத் என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு, தவ்ஹீதுக்கு எதிரான அனைத்துக்கும் துணைபோகும் அந்த துரோகம் உடைத்து எறியப்பட வேண்டியதும், தவ்ஹீத் பெயர் தாங்கிகளாக இருக்கும் அவர்கள் இனம் காட்டப்படவேண்டியதும் மிகவும் அவசியமே. அதன் அடிப்படையிலேயே தடம் புரண்டிருக்கும் அந்தத் தடயங்களை இங்கு ஆதாரங்களோடு சமர்ப்பிக்கின்றோம். பித்அத்தை ஒழிப்பதாக சீன் காட்டி, அறபிகளை ஏமாற்றிக் காசு கறக்கும் இவர்களின் நிலை கண்ணை விற்று ஓவியம் வாங்கியவனின் பரிதாப நிலையை விட விபரீதமாக உள்ளது.

தவ்ஹீத்வாதிகள் அழைப்புப் பணியில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தரக் கூடிய, மக்களோடு கலந்துறவாடி, நிதானமாக, அறிவுவழியில் செயற்படும் ஒரு நல்ல தலைமைத்துவம் இல்லாத, அநாதரவான அழைப்புப் பணியே இந்த நாட்டில் பல தசாப்தங்களாக நடைபெற்று வந்தது. திடீர் திடீரென பல பண நிறுவனங்கள் முளைத்து, அவற்றிற்கிடையே பணப் பகிர்வுப் பனிப் போர் உக்கிரமமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, தஃவா களத்தில் அத்திபாரம் தொடக்கம் ஓர் அதிரடி மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்து களத்திற்கு வந்துள்ளோம். இன்று அறபுப் பணத்தை வைத்து ஆட்டம் போடும் நிறுவனங்களில் ஏகத்துவக் கொள்கை பின்தள்ளப்பட்டுள்ளதையும் கொள்கைக் கலப்பு ஏற்பட்டு, தில்லுமுல்லுகள், துஷ்ப்பிரயோகங்கள் நடைபெறுவதையும் ஆதாரத்துடன் விமர்சினம் செய்துவருகின்றோம். அதற்காக சத்தியத்தை நேசிக்கும் யாரும் புண்படவேண்டியதுமில்லை, புண்படவும் கூடாது. கொள்கையற்ற இவர்கள், தமிழ் பேசும் நல்லுலகில் தவ்ஹீதின் வளர்ச்சிக்கு வித்திட்டு, பல சவால்களுக்கு முகம் கொடுத்து, அரபுப் பணத்திற்கு அடிமைப்படாமல்,தனது சொந்த உழைப்பால், தூய கொள்கையின் பக்கம் அழைத்துச் செல்லும் அறிஞர் பீஜேயை இவர்கள் விமர்சிப்பதற்குக் கூறும் போ­க் காரணங்களை விட, நாம் இவர்களை விமர்சிப்பதற்குப் பல நூறு நியாயமான காரணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றையே இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கின்றோம். தவ்ஹீத் பணி தவ்ஹீத் பணியாகவே தொடர வேண்டும் என்பதுதான் எமது அவாவாகும்.அதற்காகவே இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்திற்குக் கொண்டுவருகின்றோம்.இதன் மூலம் தவ்ஹீத் பிரசாரத்தில் அதிரடி மாற்றத்தையும் வேண்டி நிற்கின்றோம்.

இலங்கைத் தவ்ஹீதுக்கு முழு உரிமை கோரும் கொள்கையற்ற இஸ்மாயீல் சல்லாபி என்பாருக்கும் அவர் கூ­க்கு மாறடிக்கும் இயக்கத்துக்கும் அந்த இயக்கத்தின் தானைத் தலைவர் அபூபக்கர் சித்தீக் மதனி என்பவருக்கும் தவ்ஹீத் என்பது பணம் பண்ணுவதற்கான வழிமுறையே தவிர வேறு இல்லை என்பதற்கான பல ஆதாரங்களை எமது முன்னைய மூன்று பிரசுரங்களிலும் குறிப்பிட்டிருந்தோம். அவற்றில் ஒன்றுக்குக் கூட அவர்களால் இதுவரை பதில் சொல்ல முடியவில்லை.அத்தோடு, பொ­ஸ் நிலையம் சென்று, கருத்துச் சுதந்திரத்தை முடக்க முனையும் அளவுக்கு அவை இவர்களைக் கதிகலக்கியுள்ளது. சுருதி இறங்கி ஆட்டம் காணும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலவேசம் போடும் இவர்கள், உள்ளார தப்லீக் ஜமாஅதாகவும் ஜமாஅதே இஸ்லாமியாகவும் இக்வானுல் முஸ்­மீனாகவும் உள்ளதால் அதை வெளிப்படையாகச் சொன்னால், உண்மையான தவ்ஹீத்வாதிகளால் புறக்கணிக்கப்பட்டு, சவூதியி­ருந்து சல்­ அடிக்க முடியாது என்பதற்காக ஓரிரண்டு தவ்ஹீத் எனத் தோன்றும் கட்டுரைகளை வெளியிட்டுவிட்டு, பயான் என்ற போர்வையில் அரைத்த மாவையே அரைத்து, சவூதியை ஏமாற்றிக் கொண்டு, வழிகெட்ட இயக்கங்களின் சிந்தனைகளை விதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளில் ஒரு தரமான ஆய்வைக் கூட இவர்களிடமிருந்து இலங்கை மக்களால் காண முடியவில்லை. ஒரு தர்ஜமா(?) அதாவது தரமா உள்ளதா என்றால், மெஸ்மரிசம்,டெ­பதி என்று இஸ்லாமிய சிந்தனையி­ருந்து திருடிய, பச்சை ஷிர்க்கான கருத்துக்களைத் திணித்துள்ளனர். அதிலுள்ள திருகுதாளங்கள் பற்றிய விமர்சினங்களை அடுத்தடுத்து வெளியிடுவோம்.

ஜமாஅதே இஸ்லாமி, இக்வான்களின் கொள்கைகளை ஆதரித்து எழுதினால், ஆதரிக்குமாறு மக்களுக்கு அறிவுரை கூறினால் இஸ்மாயில் சல்லாபியை எவ்வாறு தவ்ஹீத்வாதி என்று கூற முடியும். யார் சில ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்று இஸ்மாயில் சல்லாபி எழுதுகிறாரோ, அவர்களின் பத்திரிகைகளை மக்கள் வாங்கி ஆதரிக்க வேண்டும் என்று கூறினால் அதன் பொருள் என்ன?

(முஸ்­ம் சமூகத்திற்கு மத்தியில் உண்மை உதயம், அல் ஹஸனாத் போன்ற சமயம் சார்ந்த சஞ்சிகைகள் இருக்கின்றன. எங்கள் தேசம், மீள்பார்வை, முஸ்­ம் குரல், நவமணி, சத்தியக்குரல் என்பன போன்ற பத்திரிகைகள் இருக்கின்றன. இவற்றை இலங்கை முஸ்­ம்கள் ஊக்குவித்து வளர்க்க முயல வேண்டும். (உண்மை உதயம் மே 2005, பக்கம் 03)
இதில் நவமணி ஒரு ஷீஆ சார்பான செய்திப் பத்திரிகை. சத்தியக்குரலும் ஒரு தரமற்ற, சில போது மத்ஹபை ஆதரித்து தவ்ஹீத் முகவரியில் உலாவும் இக்வான்களின் கட்டுரைகளையும் தாங்கி வரும் ஒரு பத்திரிகை. இதன் ஆசிரியர் இம்தியாஸ் சலப்பி, பீஜே வுடைய பல ஆக்கங்களைத் திருடி தனது பெயரில் வெளியிட்டுள்ளார். இவரின் அநாகரிகத்தை மறைக்கப் போய் பலவேசத்தில் பலவாறு உளரி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். இனி உளரமாட்டார் என நினைக்கின்றோம்.

அல்ஹஸனாத் ஜமாஅதே இஸ்லாமியின் சஞ்சிகை, ஒவ்வொரு இதழிலும் தவ்ஹீத் பிரசாரத்தை ஏதோ ஒரு வகையில் தரக்குறைவாக விமர்சித்தே கட்டுரை வெளியிடும். மீள்பார்வை இக்வான்களின் பத்திரிகை. பித்அத்தையும் மத்ஹப்பையும் வளர்க்கவே அது பக்கங்கள் பலதை வீணடிக்கிறது. மத்ஹப் சாக்கடைகளை இஸ்லாமிய சட்டப் பாரம்பரியம், அதை ஏகத்துவ வாதிகள் அழிக்க முனைகிறார்கள். இவர்களின் மத்ஹப் எதிர்ப்புக்குப் பின்னால் யூத கிறிஸ்தவ சதி இருக்குமோ என்று கூட அல்குர்ஆன் சுன்னாப் பிரசாரத்தைக் கொச்சைப்படுத்தி, ஆபாசமும் அரக்கத்தனமும் நிறைந்த மத்ஹபை மேன்மைப்படுத்தி, பகிரங்கமாக எழுதிய மீள்பார்வையை இலங்கை முஸ்­ம்கள் ஊக்குவித்து வளர்க்க வேண்டுமாம். இதுதான் ஹதீஸைப் பாதுகாக்கும் இலட்சணமோ! அற்ப புகழுக்காகவும் காசுக்காகவும் இஸ்லாத்திற்கே வேட்டு வைக்கும் வேடர்கள் இவர்கள் என்பது புரிகிறதா?

சில ஹதீஸ்களை மறுத்தவர் என்று இவர் விமர்சனம் செய்த அபுல் அஃலா மவ்தூதியின் கொள்கையையும் ஜமாஅதே இஸ்லாமி கொள்கைகளையும் பரப்பும் அல்ஹஸனாத் பத்திரிகையை வாங்கி ஊக்குவிக்க வேண்டுமாம்! முஹம்மத் அல் கஸ்ஸா­ முஹம்மத் அப்துஹு ஆகியோரும் ஆதாரப்பூர்வமான சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர் என்று இவர்தான் எழுதுகிறார். ஆனால், இவர்களின் கொள்கைகளைத் தாங்கி வரும் மீள்பார்வை இதழை வாங்கி, ஆதரவு கொடுக்குமாறு நயவஞ்சகத்தனமாக எழுதுகிறார்.நடிக்கும் நயவஞ்சகனைத்தவிர வேறு யாராலும் இப்படி எழுத முடியுமா? இப்போது சொல்லுங்கள்: இவர்கள் பீஜேவை தரக்குறைவாக விமர்சிப்பதற்கு, இவர்கள் கொள்கையை விற்றுவிட்டு அரபு நாட்டுப் பணத்துக்கு அலைவதை பீஜே அம்பலப்படுத்தி விட்டார் என்ற பீஜே மீதுள்ள கடுப்புக் காரணமா? கொள்கை காரணமா? என்பதை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்! இவர்களிடம் கொள்கை இருந்தால் தானே கொள்கைக்காக கோபம் வர முடியும். அதுதான் இவர்களிடம் இல்லையே! தீனாருக்கும் திர்ஹத்திற்கும் அடிமையானவர்கள் நஷ்டமடைந்துவிட்டார்கள்.(புகாரி)

அது மாத்திரம் இல்லை, இவர்கள் உண்மையாகவே, அல்லாஹ்வுக்காகவே தவ்ஹீத் பேசுவோராக இருந்தால் மேற்கண்ட பத்திரிகைகளை வாங்குங்கள் என்று கூற முடியாது. ஏனெனில், 20 ரகஅத் தராவீஹ், கூட்டு துஆ இன்ன பிற பித்அத்களை நாம் எதிர்ப்பது போலவே இந்த கொள்கையற்ற கூட்டமும் எதிர்ப்பதாக காட்டிக் கொள்கிறது. ஆனால், இஸ்மாயீல் சல்லாபி ஆதரிக்கும் மேற்கண்ட பத்திரிகைகள் இந்த விஷயத்தில் சத்தியத்திற்கு எதிரான நிலையில் உள்ளன. இவற்றைத்தான் வாங்கி ஆதரிக்க வேண்டும் என்கிறர். தவ்ஹீத் வாதிகளைக் கொச்சைப் படுத்திப் பேசுவதில் வல்லவரான அகார் முஹ்ம்மத் என்பார் தராவீஹ் குறித்து அல்ஹஸ்னாத்தில் எழுதிய பிறகும், தரீக்காக்களை ஆதரித்து எழுதிய பிறகும், ஈரானில் நடந்த ஷீஆயிஸ ஆட்சி மாற்றத்தை இஸ்லாமியப் புரட்சி எனக் கூறி, ஷியாயிஸத்தை இலங்கையில் புகுத்திய ஒர் இயக்கத்தின் பத்திரிகையான அல்ஹஸனாத்தை வாங்கிப் படியுங்கள் என்று இவரால் எப்படி எழுத முடிந்தது? கடுகளவு தவ்ஹீதை நேசிப்பவனால் கூட இவ்வாறு எழுத முடியாதல்லவா!? குப்பைகளை வாங்கவும் வளர்க்கவும் துண்டுபவன்தான் தவ்ஹீத்வாதியா?

அது போல், மீள்பார்வை எனும் பத்திரிகையின் நிலை என்ன? அவர்கள் எழுதியவற்றை சேம்பிளாகத் தருகின்றோம்.(உதவி கேட்டு சமூக சேவை நிறுவனங்களிடம் போனால் அவர்கள் நாங்கள் மாடு தருவோம் பள்ளி கட்டுவோம் கிணறு தோண்டுவோம் என்ற பாலை வனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் வட்டி முறை வங்கிகளிடம் வீட்டுக் கடன் திட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றின் வட்டி வீதமும் குறைவானது தான்) (மீள்பார்வை பெப்ரவரி 2006லிஇதழ்லி114 பலி16) அதாவது இவர்களின் திட்டங்களை மட்டம் தட்டி விமர்சிப்பதுடன் வட்டிக்குக் கடன் வாங்கி, வீடு கட்ட மக்களைத் தூண்டி, விஷத்தை விதைக்கும் மீள்பார்வையை அனைவரும் வாங்க வேண்டும் என்கிறார். தவறான கொள்கையை பீஜே கூறுகிறார். அதைப் பொறுக்க முடியாமல் தான் பொங்கி எழுந்தோம் என நாடகமாடும் JASM கூட்டம் மத்ஹபில் தான் மோட்சம் உண்டு எனக் கூறி மீள்பார்வை, குர்ஆன் லி ஹதீஸி­ருந்து மக்களை அப்புறப்படுத்த முயல்கிறதே அதை வாங்கிப் படியுங்கள் என்று சல்லாபியால் துணிந்து எழுத முடிந்தது எப்படி? இதற்கு ஆதாரமாக 2003 ஜனவரிலிபிப்ரவரி இதழை எடுத்துப் பாருங்கள். அதில் எப்படி நச்சுக் கருத்துக்களைப் பக்குவமாகப் புகுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்! அதன் தலையங்கத்தில் (இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த போது அல்அஸ்ஹர் பலகலைக்கழக மாணவர்கள் மத்தியில் காகத்தின் மாமிசம் ஹலாலா? ஹராமா? என்ற கருத்து வேறுபாட்டில் கலகம் நடந்து கொன்டிருந்ததாகக் கூறுவர்.இப்படி JASM கூட்டம் பொய்மை உதயத்தில் எழுதியுள்ளது. இது எங்கேயோ கேட்ட குரலாகத் தெரிகிறதா? விரல் அசைத்தல், நெஞ்சில் கைகட்டுதல், கூட்டு துஆ மறுத்தல் பித் அத்தைக் கண்டித்தல் என்று நம் தவ்ஹீத் பயணத்தைத் தொடர்ந்த போது, இக்வான்களும் ஜமாஅதே இஸ்லாமியும் ஒ­த்த அதே குரல் தான் இப்போது தவ்ஹீத் வேசிதாரிகளால் ஒ­க்கப்படுகிறது.

அதாவது போலி­ ஒற்றுமைக்காக இது போன்ற சட்ட சர்ச்சை கூடாதாம். இதனால் பிளவு ஏற்படுமாம். இப்படி வாதிடுபவர் தவ்ஹீத்வாதியா? இரண்டாம் உலகப் போர் நடந்தால், காகம் ஹலாலா? ஹராமா? என்று ஆய்வு செய்யக் கூடாதாம். ஹலால் ஹராம் பிரச்சினை சின்ன விஷயமாம். இவ்வாறு, இவர்களின் கொள்கையே இக்வான், அல்ஹஸனாத் கொள்கையாக இருக்கும் போது, அதை வாசிக்கும் படி பரிந்துரை செய்வதில் என்ன ஆச்சரியம்? அதே தலையங்கத்தில் மீள்பார்வைக் கொள்கையை மீண்டும் வாந்தி எடுப்பதைப் பாருங்கள்! முஸ்­ம்கள் தயம்மும் செய்வது எப்படி என்று சர்ச்சை செய்து தீர்மானம் எடுத்தார்களாம். ஆனால், அவர்கள் சர்ச்சைப்பட்டு முடிவதற்குள் அவர்களின் சொந்த பூமி ஆக்ரமிக்கப்பட்டு தயம்மம் செய்ய சொந்த மண்ணில்லாது போனது என்பர் என்று மடமை மிகுந்த, தவ்ஹீதுக்கு எதிரான இக்கருத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றுவது தெரிகிறதா? யுத்த களத்திலும் தொழச் சொன்ன மார்க்கத்தில் யுத்தம் நடக்கும்போது தயம்மும் பற்றி விவாதிப்பதை ஒரு முஸ்­ம் குறை காண்பானா? நான் இபாதத் விஷயத்தில் சோம்பேறி என்று ஒத்துக் கொள்ளும் இஸ்மாயீலுக்கு இதுவெல்லாம் சர்வ சாதாரண விடயம்தானே.

எவ்வளவு முக்கியமான நேரம் என்றாலும் மற்ற காரியங்களைச் செயயக் கூடாது என்று அறிவி­தான் கூறுவான். யுத்தம் நடக்கும் போது சாப்பிட மாட்டார்களா? மலஜலம் கழிக்க மாட்டார்களா? தலை வ­த்தால் மாத்திரை போட மாட்டார்களா? அதை விட முக்கியமான வணக்கத்தையும் அதைச் செய்யும் முறை பற்றியும் பேசக்கூடாது என்று நச்சுக் கருத்தை விதைக்கும், வட்டிக்கு முழுப் பக்க விளம்பரம் செய்யும் உண்மை உதயத்தை வாசிப்பதே பாவம். பத்தோடு பதினொன்றாக குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடுங்கள். இந்த மடமை வாதத்தை தோலுரித்தால் கட்டுரை இன்னும் நீண்டு விடும். (இந்த மடமை வாதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிந்திட ஒற்றுமைக் கோஷமும் ஓறிறைக் கொள்கையும் என்ற பயான் CD பார்த்துக் கொள்க)


இவர்களின் சிந்தனை முழுவதும் தவ்ஹீதுக்கு எதிரான போக்கே நிறைந்து காணப்படுகிறது. தவ்ஹீத் கொள்கைப் பிடிப்பு காரணமாக இவர்கள் விமர்சனம் செய்யவில்லை. சவூதி சல்­ விஷயமாக பீஜே விமர்சித்த கோபம் தான் காரணம் என்பதற்கு மற்றொரு உதாரணத்தைப் பாருங்கள்! கமிஷனோ, ஆதாயமோ கிடைக்கிறது என்பதற்காக அரபு நாட்டி­ருந்து பணம் வாங்கி, பள்ளிவாசல் கட்டிவிட்டு போகட்டும். ஆனால், அவ்வாறு கட்டப்படும் பள்ளிவாசல் குர்ஆன் லி ஹதீஸ் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தான் உண்மையான தவ்ஹீத்வாதி நினைப்பான். தவ்ஹீதுக்கு எதிரான காரியங்கள் நடக்கும் பள்ளிகளுக்கு அரபுகளிடம் பணம் வாங்கிக்கொடுக்க மாட்டான். இவர்கள் கட்டிய பல பள்ளிகளில் தவ்ஹீத்வாதிகளுக்கு தீங்கிழைக்கப்படுகிறது. இவர்களின் இழிசெயலை அல்லாஹ் இவ்வாறு கண்டிக்கின்றான்.



(தீங்கிழைப்பதற்காகவும் (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும் நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும் இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகரிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் 'நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். 'அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும் அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (குர்ஆன: 07:107லி109) இவ்வசனங்கள் இவர்கள் பற்றிப் பேசுவது போல் உள்ளதல்லவா?

தவ்ஹீதுக்க்காக முத­ல் கட்டிக் கொடுத்த பள்ளிவாசல் இது தான்.




ஏத்தாளை என்ற கிராமத்தில் இவர்களால் தவ்ஹீதுக்காக ஒரு பள்ளிவாசல் அரபு நாட்டு சல்­யில் கட்டிக் கொடுக்கப்பட்டது. தவ்ஹீதுக்காக ஒரு பள்ளி இருக்கும் ஏத்தாளையில், அந்தப் பள்ளிக்கு சில மீட்டர் தொலைவில் அதைவிட பெரிய பள்ளிவாசல் தப்லீக் இயக்கத்தவர்களுக்காக இவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஒரு கோடி ரூபாவில் பிரமாண்டமான அந்த இரண்டு மாடி தப்லீக் பள்ளி திறப்பு விழாவில் அபூமக்ர் ஸித்தீக் மதனி குத்பா செய்துவிட்டு, தப்லீக் இமாமுக்குத் தொழுவிக்கக் கொடுத்தார். அவர் தொழுவித்துவிட்டு, கூட்டு துஆ ஓதி, பித்அத்தை அரங்கேற்றினார். இதற்கு, இவரும் இஸ்மாயில் உட்பட,கொள்கை கெட்ட இவர் கூ­ப்படைப் பரிவாரர்களும் அங்கீகாரம் அளித்தனர்.

தவ்ஹீத் கொள்கைக்காக பாடுபடுபவரின் செயல் இதுவா? இது போன்ற பள்ளிக்கு உதவலாமா? என்று இஸ்மாயீல் சல்லாபி தனது எஜமானரிடம் கேட்டாரா? கூட்டு துஆ ஓதும் போது, தானும் தடுக்காமல் தனது எஜமானிடம் ஏன் பார்த்துக் கொண்டிருந்தீர் என்று இஸ்மாயீல் சல்லாபி கேட்டகவில்லை. தவ்ஹீதுக்க்காக நாமே கட்டிய பள்ளிவாசல் இருக்கும் போது, அதற்கு எதிராக அதைவிட பெரிய பள்ளியைக் கட்டிக்கொடுப்பது முறையா? என்றாவது உண்மை உதயத்தில் எழுதினாரா? அதுவும் இல்லை.இவர்தான் ஹதீஸைப் பாதுகாக்கப் போகிறாராம்.
தவ்ஹீதுக்கு எதிராக தப்லீக் ஜமாஅத்திற்கக் கட்டிகொடுத்த அதைவிட இரண்டு மாடிப் பெரிய பள்ளிவாசல் இது தான்.

இது ஓர் உதாரணம் மட்டுமே. இவர்கள் கட்டிக் கொடுத்துள்ள பல பள்ளிகளில் தவ்ஹீதுக்கு எதிரான அத்தனை அனாச்சாரங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுன்னா முஹம்மதியா லேபலை வைத்துக்கொண்டு சுன்னாவுக்கு எதிராக அனைத்து அராஜகங்களையும் அரங்கேற்றுகிறீர்களே!



கிருபாவ என்ற ஊரில் தேவை இல்லாமல் ஒரு பள்ளி கட்டி கமிஷன் அடித்தனர்.திறப்பு விழா அன்றுதான் அப்பள்ளியில் தொழுகை நடைபெற்றது, இன்றுவரை மூடிக்கிடக்கிறது. மக்கள் இல்லதாத இடத்தில் பள்ளிகட்டிப்போடுவதன் மர்மம் என்ன.

பன்னவ என்ற ஊரில் இவர்கள் பள்ளி கட்டிக் கொடுத்துள்ள இடத்தை ஒட்டி 2004க்கு முன்னர் ஐ.ஐ.ஆர்.ஓ. சார்பில் ஒரு பள்ளிவாசல் கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்த ஊரார் பெயிண்ட் அடித்துத் தருமாறு ஐ.ஐ.ஆர்.ஓ அமைப்பிடம் கேட்ட போது, அதற்கு நிதி இல்லை என்று மறுத்து விட்டனர். இந்த நிலையில்; ஜம்மியது அன்ஸாரிஸ் ஸுன்னாவை அணுகினார்கள். முடிந்தால் பெயிண்ட் அடித்துக் கொடுக்கலாம். முடியாவிட்டால் இல்லை என்று கூறி இருக்கலாம். பள்ளிவாசல் கட்டிக் கொடுப்பதால் கொழுத்த கமிஷன் கிடைக்கும் போது இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடுவார்களா?



ஏன் பெயிண்ட் அடிக்க வேண்டும்? பக்கத்தில் புதிதாகப் பள்ளிவாசல் கட்டித் தருகிறோம் என்று கூறி அந்தப் பள்ளிவாசலை ஒட்டி இவர்கள் இன்னொரு பள்ளிவாசல் கட்டிக் கொடுத்தனர். இதைப் பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை. நரி நாடகமாடும் நாகரிகம் கெட்டவர்கள் இவர்கள் அல்லாஹ்வின் பள்ளியையே பாழ்படுத்துவார்கள். கமிஷன் மட்டுமே குறிக்கோள் என்பதால் அங்கே ஒரு பள்ளிவாசல் தேவை இல்லாமல் இருந்தும் அநியாயமாக அடுத்தவர் பணத்தைப் பாழாக்கியுள்ளனர். இதில் இருந்து பணத்துக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அரபுகளை மட்டும் இவர்கள் ஏமாற்றவில்லை. அப்பாவி இலங்கை மக்களையும் ஏமாற்றியுள்ளது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

வட்டிக்கும் மோசடிக்கும் விளம்பரம்




வரையறுக்கப்பட்ட சி­ன்கோ பொரொஃபிட் ஷெயரிங் இன்வெஸ்ட்மெண்ட் கோப்பரேஷன் என்ற பெயரில் மக்கள் பணத்தை மார்க்கத்தின் பெயரால் சுருட்டும் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் லாபம் என்று கூறிக் கொண்டாலும் வட்டியும் மோசடியின் மறு பெயரான ஷேர் என்பதும் தான் இவர்களின் திட்டம். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தான் என்று கள்ள ஃபத்வா ஒன்று கொடுக்கப்பட்டது. ஃபத்வா கொடுத்தவர்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை. இந்த ஃபத்வா குழுவில் அபூபக்கர் சித்தீக் மதனியும் நவ்ஃபர் மவ்லவியும் இருந்தார்கள். பீஜேவுக்கு எதிராக பரகஹதெனியப் பள்ளியில் அரசியல் வாதி கடன் வாங்கும் அளவு நாகரிகம் தவறிப் பேசும் இவர்; வட்டி பற்றியும் மோசடி பற்றியும் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ஜம்இய்யத்துல் உலமாப் பதவிக்காகவா?அல்லது வட்டியைக் கண்டித்த அல்குர்ஆனை நீங்கள் பாதுகாக்கம் நவீன வழி முறையா?

யூதர்களின் பொருளாதாரத் திட்டமான வட்டி முறையில் இலங்கை முஸ்­ம்கள் பணம் போட வேண்டும் என்பதற்காக இஸ்மாயீல் சல்லாபி உண்மை உதயம் இதழில் கடைசிப் பக்கத்தில் முழுப் பக்க விளம்பரம் கொடுத்தார். பீஜேவுடைய மாமிசத்தை உண்ணும் இவர்களுக்கு ரோசம்,சூடு,சொரணை இருந்தால் இதற்கு மட்டுமாவது பதில் சொல்லட்டும். மார்க்கத்துக்கு முரணான இந்தச் செயலை ஹலால் என்று ஃப்த்வா கொடுத்ததுமட்டுமல்லாமல் மக்கள் போட்ட பணத்தைச் சுருட்டியும் உள்ளனர். சுருட்டப்பட்ட பணம் 80 கோடி ரூபாய். பணம் போட்ட அப்பாவிகள் கொந்தளித்துப் போய் கடந்த ஒக்டோபர் 23 ஆம் தேதி வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின் ஊர்வலமாகத் திரண்டு சென்று, ஜம்மியதுல் உலமா சபை செய்துள்ள மோசடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டட்திலும் ஈடுபட்டுள்ளனர்.


இது சுடர் ஒளி பத்திரிகையில் 24 ஆம் தேதி வெளியாகியுள்ளது. விளம்பரம் செய்த சல்லாபிக்கு எவ்வளவு பங்கு? ஃப்த்வா கொடுத்த சித்தீக் மதனிக்கு எவ்வளவு பங்கு? என்று மக்கள் கேட்கிறார்கள். இதற்கும் JASM வகையறாக்கள் பதில் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நாளை பறகஹதெனியாவிலும் ஆர்பாட்டம் நடைபெறலாம்.

நபித்துவ வாதமும் நாகரிகமற்ற நடைமுறையும்:

அண்மையில் ஸித்தீக் மதனி குருநாகல் லி தல்கஸ்பிடிய பள்ளியில் ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு சொல்வதுதான் சட்டம். இந்த நாட்டில் பத்வா வழங்கும் உரிமை எனக்கு மட்டுமதான் உண்டு என்று உரத்து முழங்கியுள்ளார். அத்தோடு ஜனாஸாத் தொழுகையில் கைகளை அவிழ்த்து உயர்த்தித்தான் கட்ட வேண்டும் என்றெல்லாம் உளறியுள்ளார். அப்போது அங்கு பள்ளியில் இமாமாக கடமையாற்றிய தம்பாளையைச் சேர்ந்த மவ்லவி அன்ஸார் மஜீதி அவர்கள் இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று இவரிடம் கேட்டபோது, நான் யார் என்று உனக்குத் தெரியுமா? நீ யாரைப் பார்த்து கேள்வி, ஆதாரம் எல்லாம் கேட்கின்றாய் என்று அவரை அச்சுறுத்தும் தோரணையில் மிரட்டியுள்ளார். இதற்கு முன்னர் இவரிடம் ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு பற்றிக் கேட்ட போது. இதைப்பற்றியெல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது.நான் நாய். இப்படி மார்க்கக் கேள்வி கேட்டால் நான் வெறிபிடித்த விசர் நாயாக மாறிவிடுவேன் என்றார்.ஒரு முறை ஏத்தாளைப் பள்ளியில் அவர் அமீரல்ல ஹமீர் (கழுதை) என்று உமர் அ­யைத் தூற்றினார். மதீனாவில் படித்த மதினியின் பண்பான வார்த்தை பிரயோகம் இதுதானோ? இவர்கள்தான் நாகரிகம் பற்றி வெட்கம் கெட்டுப் பேசவும் செய்கிறார்கள். இத்தகைய அநாகரிகம்தான் இவர்களின் அகராதியில் நாகரிகமோ?

பறகஹதெனிய பள்ளியில் ஜும்மாவுக்கு ஒரு பாங்கு என்ற நபிவழியை ஏற்றுச் செயல் படுத்தி வருவதன் மூலம் இந்த நபிவழி அவருக்குத் தெரிகிறது. இந்த நபிவழியை நபிவழி என்று தெரிந்து கொண்டே மறுப்பது நுபுவ்வத்தை மறுப்பதாக இஸ்மாயில் சல்லாபிக்கு தோன்றவில்லையே? அதற்குக் காரணம் என்ன? நுபுவ்வத்தை இவ்வளவு தெளிவாக ஒருவர் மறுக்கிறார். அவருக்கு எதிராக வாய்திறக்காத இவர், இப்போது பீஜேவுக்கு எதிராக வாய் திறந்திருப்பதற்கு மார்க்க உணர்வைக் காரணம் காட்ட அருகதை இருக்கிறதா?

தீய கொள்கையுடையவர்களை எதிர்ப்பதற்குப் பதிலாக எப்படியெல்லாம் இவர்கள் ஒட்டி உறவாடி ஆதரித்து வருகின்றனர் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள். அகார் முகம்மது என்பவர் ஜமாஅதே இஸ்லாமியின் பிரசாரகர். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்கள் என்ற பட்டிய­ல் இஸ்மாயீல் சல்லாபி இடம் பெறச் செய்த அபுல் அஃலா மவ்தூதியின் கருத்தைப் பரப்பிக் கொண்டிருப்பவர். ஜமாஅதே இஸ்லாமியின் கொள்கையை அதாவது ஸலபிக் கொள்கைக்கு எதிரான கொள்கையைப் பரப்புவதற்காக அகார் முகம்மது ஓர் இணைய தளத்தை ஆரம்பித்தார். தவறான கொள்கைக்காக ஒர் இணைய தளம் துவங்கப்படுகிறது என்றால், உண்மையான கொள்கைவாதியின் கடமை என்ன? அது பற்றி மக்கள் விழிப்படையும் வகையில், அதன் தீய கொள்கைகளை எச்சரித்து, தெளிவுபடுத்த வேண்டும். இந்த அளவுக்கு தீவிரம் காட்ட சக்தியில்லை என்றால், கண்டு கொள்ளாமல் மௌனமாகவாவது இருக்க வேண்டும். ஆனால்,அந்த இணைய தளத்துக்கு இஸ்மாயில் சல்லாபி வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். (...தமிழ் உலகுக்கு நன்கு பரிச்சயமான தலை சிறந்த எழுத்தாளரும் பேச்சாளருமான அஷ்ஷெய்க் ஏ.சி அகார் முஹம்மத் (நளீமி) அவர்களது ஆழமான இந்த அறிவுப்பணி தமிழ் சிங்கள உலகில் எழுச்சிமிக்க இஸ்லாமிய சிந்தனையை ஏற்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன். எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி.) ஹதீஸைப் பாதுகாக்க கொந்தளிக்கும் லட்சணம் இதி­ருந்து தெரிகிறதா? வழிகெட்ட அமைப்புகள் தவறாக இணைய தளத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், அகார் முகம்மதுவின் இணைய தளம் வழிகெட்ட இணைய தளம் அல்ல என்று இவரால் எப்படிச் சொல்ல முடிந்தது? இஸ்லாமிய தாகத்தைத் தணிக்க இந்த இணைய தளம் துவங்கப்பட்டிருப்பதாக இவரால் எப்படி எழுத முடிந்தது? தவறான கொள்கையுடைய இணைய தளம் எழுச்சிமிக்க இஸ்லாமியச் சிந்தனையை எப்படி ஏற்படுத்தும்? தீய கொள்கையைப் பிரசாரம் செய்பவர் எப்படி தலை சிறந்தவராக இவரது கண்களுக்குத் தென்படுகிறார்.தவறான கொள்கை என்பதற்காக இவர்கள் கொதித்து எழக் கூடியவர்கள் அல்லர்.அரபு நாட்டுப் பணக் கையாடல் தொடர்பான நமது விமர்சனத்தின் பாதிப்பினால் தான் மறுப்புக் கட்டுரை வரைந்துள்ளார் என்பதற்கு இதுவும் தக்க சான்றாகும்.

இதேபோல், இவர்களின் ஒரே நோக்கம் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே என்பதை பாக்கர் மீது தவ்ஹீத் ஜமாஅத் நடவடிக்கை எடுத்த போது இவர்கள் நடந்து கொண்ட விதம் மேலும் உறுதிப்படுத்தியது. தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கேடு கெட்டவர்களையும் ஆதரித்து எழுதும் அளவுக்கு இவர்கள் தரம் தாழ்ந்து போயினர். தீமைக்கும் தீயவர்களுக்கும் எதிராகக் கோபம் ஏற்படுவதற்குப் பதிலாக 'அந்நியப் பெண்ணோடு இரவு முழுவதும் 16 மணி நேரம் அருகருகே அமர்ந்து பயணம் செய்வது தவறா என்று பகிரங்கமாக உரையாற்றிய பாக்கரை அடையாளம் காட்டியவர்களுக்கு எதிராக பொய்மை உதயத்தில் கட்டுரை எழுதும் அளவுக்கு இவர்கள் கேவலமான நிலைபாட்டை எடுத்தார்கள். கோவை ஐயூப் போன்ற இவ்வாறானவர்களை மேடையேற்றி, ஆதரிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன என்பது ஊரறிந்த இரகசியமே.

மக்களால் நன்கு அறியப்பட்ட ஒரு பிரசாரகர் பா­யல் குற்றச்சாட்டில் சிக்கி மக்கள் அனைவருக்கும் அது தெரிந்து விட்ட நிலையில் அதை மூடி மறைப்பது தஃவாவைப் பாதிக்குமா? தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பது தஃவாவைப் பாதிக்குமா? தனி மனிதனுக்காக ஒர் நல்ல இயக்கம் பழிச்சொல்லை ஏற்றுக் கொண்டு மவுனம் சாதிப்பது தஃவாவைப் பாதிக்குமா? தனி மனிதனை விட தஃவா முக்கியம் என்பதற்காக அம்பலப்படுத்துவது தஃவாவைப் பாதிக்குமா? மூளையைக் கழற்றி காயப்போட்டு விட்டுத் தான் அடுத்தவருக்கு அறிவுரை கூறுவீர்களா? சத்தியப் பிரசாரத்தில் ஈடுபடும் தாயி இப்படித் தான் சிந்திப்பாரா? நல்ல ஓர் இயக்கத்தை தனி நபர் ஒருவர் தனது கெட்ட நடத்தையால் நாசமாக்கி விட்டாரே என்று சிந்திப்பாரா?

முக்கியப் பிரசாரகர்கள் மீது அருவருப்பான குற்றச்சாட்டுக்கள் வரும் போது மூடி மறைப்பதும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை முன்னிலைப்படுத்தி பக்கதுணையாக்குவதும் உங்கள் வழக்கமாக இருந்தால், அதை உங்களோடு வைத்துக் கொண்டிருக்க வேண்டும். உங்களைப் போல் தீமைகளில் சமரசம் செய்யுமாறு எங்களுக்கு அறிவுரை கூறினால் அதன் உள்நோக்கம் பற்றி நாங்களும் பகிரங்கமாகப் பேச வேண்டிய நிலை ஏற்படும்.

தவ்ஹீத் பிரசாரம் செய்தால் சுன்னத் ஜமாஅத்தினர் த.மு.மு.க.வுக்கு வர மாட்டார்கள் என்று கூறியதால் தான் பீஜே விலகும் நிலை ஏற்பட்டது. இதை த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாஹ் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். இது உணர்விலும் வெளியிடப்பட்டது. தவ்ஹீத் சகோதரர்கள் த.மு.மு.கவை விட்டு விலகிய நேரத்தில் இவர்கள் எந்தப் பக்கம் நின்றிருக்க வேண்டும்? மதனிகள் எந்தப் பக்கம் நின்றிருக்க வேண்டும்?





த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாஹ், சாமியாரிடம் ஆசி பெறுவது கூட உங்களுக்குச் சாதாரணமாகத் தெரிகிறது என்றால், நீங்கள் எங்களை எதிர்ப்பதன் காரணம் பளிச்சென்று தெரிகிறதே. பீஜே தவ்ஹீத் பேசுவதால் இயக்கம் வளர்க்க முடியாதுள்ளது என்று, அந்த அமைப்பை உருவாக்கி, வளர்த்த அமைப்பாளரையே வெளியே போ என்று கூறிய நன்றி கெட்ட ஜவாஹிருள்ளாஹ்வுடன் கூட்டாக அலைகிறீர்களே. இந்த ஜவாஹிருள்ளாஹ் கும்பல் கந்தூரியை ஆதரித்து ழுளுவுநுசு அடிக்கிறது. தவ்ஹீத் வாதிகளைத் தாக்கி விட்டு, அவர்கள் மீது பல பொய் வழக்கும் போட்டுள்ளது. இப்போது, ஜவாஹிருள்ளாஹ் இயக்கம் கொள்கையற்று நிற்கிறது. அதனோடு, இணைந்த நீங்களும் கொள்கை கெட்டு நிற்கிறீர்கள். தீனாருக்கும் திர்கத்திற்கும் அடிமைப்பட்டுப் போன இத்தகைய மனித ஜடங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

அதேபோல் உங்கள் பார்வையில் கெட்ட கொள்கையுடைய பீஜே தமிழாக்கத்தை வாங்கிப் படிக்கச் சொன்னது எப்படி? 2002 ல் பீஜே தவறான கொள்கைக்கு மாறிவிட்டதாக நீங்கள் கூறுவது உண்மையானால் 2003ல் எப்படி அவரது தமிழாக்கத்திற்கு விளம்பரம் மட்டுமின்றி, ஒற்றுமையில் வெளிவந்த அவரது தமிழாக்கம் குறித்த பேட்டியை ஆறு பக்கங்களில் தன்னார்வத்துடன் பிரசுரம் செய்தீர்களே! அந்தத் தமிழாக்கத்துக்கு பீஜே கேட்டுக் கொள்ளாமலே தானாக முன் வந்து விளம்பரம் போட்டீர்கள். தமிழாக்கம் குறித்து வேறொரு பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியை அவர் கேட்டுக் கொள்ளாமலே நீங்களாக வெளியிட்டீர்கள். இதற்குக் காரணம் என்ன?

அரபு நாட்டுப் பணக் கையாடல் துஷ்பிரயோகம் குறித்து பீஜே விமர்சித்ததால், மக்கள் மத்தியில் உங்கள் இயக்கம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டன. இதி­ருந்து தப்பிக்க வேண்டுமானால் விமர்சனம் செய்தவனை வழி கெட்டவனாகச் சித்திரித்தால் போதும். பிரச்சினை திசை திரும்பி விடும் என்று மனப்பால் குடித்தீர்கள். அதற்காகத் தான் மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்பதைக் கையில் எடுத்தீர்கள். ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்று கூறும் போது மக்களிடம் எளிதாக எடுபடும் என்றும் கருதினீர்கள். அதன் விளைவாகத் தான் நீங்கள் விமர்சிக்கிறீர்கள் என்பதை நீங்கள் வெளியிட்ட விளம்பரமும் பேட்டியும் நிரூபிக்கின்றன. உங்கள் வாதப்படி உங்கள் அமீர், பயணத்தோழர் முபாரக் சலப்பி ஆகியோரும் வழிகேடர்கள் தானே. கூட்டிக்கழித்துப் பார்த்தால் உங்கள் எழுத்துப் படி நீங்களே வழிகேடர் என்றாகிவிட்டது. இனி ஹதீஸ்கள் பற்றிப் பேச உங்களுக்கு அருகதை இருக்கிறதா என்பதையாவது கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கக் கூடாதா?

தவ்ஹீத் ஜமாஅத் என்று நாங்கள் குறிப்பிட்டது இவர்களை உசுப்பியுள்ளது. அதனால் வரலாற்றைத் திருடியதாக புலம்புகின்ற இவர் தன்னை ஸலபி என்று அறிமுகப்படுத்துகிறார். ஸலபிய்யாக் கலாபீடத்தில் படித்துப் பட்டம் பெற்ற நூற்றகணக்கானவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் ஸலபிதான். ஊலகில் ஸலபிக் கொள்கையுள்ள எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். யஹ்யா சில்மியும் தன்னை ஸலபி என்றுதான் குறிப்பிடுகிறார். இவ்வாறு பலருடைய கொள்ளை நாமமாக ஸலபி என்பது இருக்க, இவர் மட்டும் தன்னை ஸலபி என்று அறிமுகப்படுத்தி, முழு ஸலபிகளினதும் பட்டத்தையே திருடி விட்டு மற்றவர்களை வரலாற்றுத் திருடர்கள் என்றால் உலகம் ஏற்குமா? இந்த நாட்டில் பல அறபுக் கலாசாலைகள் உள்ளன. அவற்றில் கற்ற யாரும் தன்னுடைய பெயருடன் இணைத்தே பட்டத்தைப் போடுவார்கள். யாரும் தன்னுடைய பெயரை நளீமி, கபுரி, காஸிமி, மதனி என்று கட்டுரைகளில் குறிப்பிடுவதில்லை. அப்படி இருக்க, இவர் மட்டும் முழு ஸலபிஸத்தையும் திருடிக்கொண்டுள்ளார்.

இஸ்மாயில் சல்லாபி தான் எந்த ஜமாஅத் என்றே தெரியாததால் ஒரு பிரசுரத்தில் நான் எந்த ஜமாஅத் என்று கேள்வி எழுப்புகிறார். எந்தளவு கலந்து காணமால் போய்விட்டார் என்பதற்கு இதுவே பெரிய ஆதாரம். மலத்திலும் உணவிலும் மாறி மாறிக் குந்தும் ஈ தனது பெயரை அடிக்கடி மறந்து விடுமாம். எல்லா இயக்கங்களிலும் சங்கமமானால் தான் எந்த ஜமாஅத் என்பது மறக்கத்தானே செய்யும். நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத் என்று சொல்வதற்கு அருகதை அற்றவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இன்னமும் சொல்ல வேண்டுமானால், உங்கள் அமீர் ஸித்தீக் மதனி, மெனிக்ஹின்னப் பள்ளி திறப்பு விழாவிலும் இன்னும் பல இடங்களிலும், தப்லீக் ஜமாஅத், ஜமாஅத் இஸ்லாமி, JASM எல்லாம் கொள்கையில் ஒன்று என்று பேசினார். இது அப்போது தினகரன் பத்திரிகையிலும் வெளிவந்தது. பத்தோடு பதினொன்றாக இருக்கும் நீங்கள் எப்படி தவ்ஹீத் ஜமாஅத்தாக முடியும். இலங்கையிலுள்ள மற்ற இயக்கங்கள் எல்லாம் ஜமாஅத் என்று பெயர் வைத்துள்ளன. பெயரில் கூட நாம் அவர்களி­ருந்து வேறுபடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக جمعية أنصار السنة المحمدية என்பதை جماعة أنصار السنة المحمدية என்று, நீங்கள் பெயரையே மாற்றி, வழிகெட்ட ஜமாஅத்களோடு நாங்கள் பெயரிலும் சமாமனவர்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் போது, இன்னும் நீங்களே எழுத்தால், பேச்சால் நாங்கள் தவ்ஹீத் இல்லையென்று கூறும் போது நாங்கள் எப்படி உங்களைத் தவ்ஹீத் என்பது. இவர் கொள்கை கெட்டுப் போனது மட்டுமல்லாமல், ஷீஆ சார்பான பத்திரிகைகளை வாங்கிப் படிக்கத் தூண்டி, இலங்கை முஸ்­ம்களையும் வழிகெடுக்க முனைகின்றாகள்.பணத்திற்காகவும் பிரபல்யம் ஆகவேண்டும் என்ற கீழ்த்தரமான உணர்வினாலும் எதையும் செய்யத் துணிகிறார்கள். மக்களே! இவர்களையா நம்பினீர்கள்?

இலங்கையில் உண்மை உதயம் என்ற ஏடு 50 வருடங்களில் சான் ஏறி முழம் சறுக்கி எப்படியோ 100வது இதழ் வெளிவந்தது.அதற்கு யாரும் வாழ்த்து அனுப்பவில்லை.பாவம் இஸ்மாயில் ஸலபி. அதை வெளியிடும் JASM கூட 100வது இதழை சிறப்பிதழாக வெளியிடவில்லை. இப்படி இவர் பரிதாபப்பட்டு நிற்கிறார்.அசத்தியவாதிகள் அவர்களின் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.தவ்ஹீத் போர்வையைப் போர்த்தியுள்ள இவர்கள் ஏதுமற்று, ஏமாந்து நிற்கிறார்கள். இதைவிடக் கேவலம் வேறு உண்டோ?

JASM பித்அத்வாதிகளுக்காக பல இலட்சம் ரூபாவில் கட்டும் பள்ளி திறப்பு விழாவில் பல்வேறு பித்அத் அரங்கேற்றத்தோடு, இஸ்மாயில் ஸலபியும் உரையாற்றுவார். அவற்றை எல்லாம் இவர் கண்டிப்பதில்லை. அண்மையில், பண்டாரகொஸ்வத்தை என்ற ஊரில் உள்ள தப்லீக் ஜமாஅத்திற்குJASM பித்அத் செய்யக் கட்டிக் கொடுத்த பள்ளியில், கொள்கையற்ற கோமாளி கோவை ஐயூபுடன் இஸ்மாயில் சல்லாபி உட்பட JASM வகையறாக்கள் நிகழ்ச்சி ஒன்று நடாத்தினர். அங்கு அஸர்,மக்ரிப்,இஷா ஆகிய மூன்று தொழுகையின் பின்னரும் கூட்டு துஆ ஓதப்பட்டதைப் பார்த்த பலர் இவர்கள் என்ன தவ்ஹீத் வாதிகள் என்று காறித் துப்பினர். அங்கு பேசிய யாரும் கூட்டு துஆ பித்அத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை. இதேபோல்தான் இவர்கள் கட்டிய பல பள்ளிகளின் நிலைமை உள்ளது. இவ்வாறான கீழ்த்தரமான மார்க்க விரோத நடவடிக்கைகளால், இவர்கள் பணத்துக்காக கொள்கையை அடகு வைக்கும் கூட்டம் என்பதும் உறுதியாகி விட்டது. உங்களை வழிகேட்டி­ருந்து நேர்வழிக்கு வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.

ஏ தவ்ஹீத் வேசதாரிகளே! ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நாங்கள் மறுப்பதாக கூறுகின்றீர்களே. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என்னவென்ற ஹதீஸ்கலையின் ஞானமாவது உங்களிடம் இருக்கிறதா ?
அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தால் மாத்திரம் அது ஆதாரபூர்வமானதாக ஆகிவிடுமா ?
அல்லது அதன் கருத்தும் குர்ஆனுக்கு முரண்படாமல் இருக்கவேண்டுமா ?
உயிரைக் கைப்பற்ற வந்த மலக்குல் மவ்த்துக்கு மூசா நபி கண்ணத்தில் அரைந்தது உண்மை என்று உங்கள் பொய்மை உதயத்தில் எழுதி குப்ரியக் கருத்துக்களை விதைத்து இருக்கிறீர்களே ! உங்களை பார்த்து தவ்ஹீத் வாதிகள் என்பதா ? தடம்புரண்ட வாதிகள் என்பதா? மக்களுக்கு ஒரு கருத்தைச் சொல்­விட்டு, அதற்கு குர்ஆன் சுன்னா என்று சாயம் பூசிவிட்டு, அதனை மக்கள் மன்றத்தில் விவாதித்து நிலைநாட்ட திராணியற்ற உங்களை விவாதத்திற்கு அழைத்து அழைத்து எங்களுக்கு அலுத்துப் போய் விட்டது. எனவே, அரபு பணத்திற்காக அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளையாடும் உங்கள் போக்கை உடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் அம்பலத்திற்கு வராத பல உங்கள் அம்பலங்கள் இன்னும் வெளிவரும். இன்ஷா அல்லாஹ்

சா­லிம் தொடர்பான பால்குடி சட்டத்தை ஆதாரபூர்வமானது என்று கூட்டம் போட்டுக் கூறும் நீங்கள் அந்த சட்டத்தை உங்கள் மனைவி மார் விடயத்தில் அமுல்படுத்துவீர்களா ? பதிலை எதிர்பார்த்து நிறைவு செய்கின்றோம். உண்மை வந்தது. பொய் அழிந்தது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது.உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடுதான். (அல்குர்ஆன் 21:18)

TNTJ - SRILANKA